Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்

Posted by:
Published: Friday, April 12, 2013, 12:14 [IST]
 

லண்டன்: தொடர்ந்து 3வது முறையாக விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடர்கிறது.

கிரிக்கெட் ஆட்டத்தின் பைளிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் பத்திரிகை ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவப்படுத்தி வருகிறது.

இவர்கள் தவிர வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் மார்லோன் சாமுவேல்ஸ், தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் காம்ப்டன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தேர்வு பெற்றவர்கள்...

இந்த ஆண்டுக்கான (2012-13) சிறந்த வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, ஆல்-ரவுண்டர் காலிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூணாவது மூணு...

இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட 5 வீரர்களில் 3 பேர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்டன் சிறந்த வீரர் பட்டியலில் ஒரே ஆண்டில் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் இடம் பிடிப்பது இது 3-வது முறையாகும்.

1966லும், 2009லும் ...

இதற்கு முன்பு 1966 (கிரேமி பொல்லாக், பீட்டர் பொல்லாக், காலின் பான்ட்), 2009 (டாலே பென்கென்ஸ்டின், மார்க் பவுச்சர், நீல் மெக்கன்சி) ஆகிய ஆண்டுகளில் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

English summary
South Africa dominated the Wisden 'Cricketers of the Year' list for 2012 with three players -- a feat accomplished for the third time in the country's 150-year history.
கருத்தை எழுதுங்கள்