Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஷேவாக் அப்படியே ஒதுங்கி விடுவார், இனி இந்தியாவுக்காக ஆட மாட்டார்- பாய்காட்

Posted by:
Published: Friday, April 12, 2013, 9:55 [IST]
 

ஷேவாக் அப்படியே ஒதுங்கி விடுவார், இனி இந்தியாவுக்காக ஆட மாட்டார்- பாய்காட்
 

டெல்லி: வீரேந்திர ஷேவாக் இனிமேல் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பில்லை.அப்படியே ஐபிஎல் போட்டிகளுடன் ஒதுங்கி விடுவார். அவரது சிறப்பான பங்களிப்பை இந்திய ரசிகர்கள் நீண்ட காலம் மறக்க மாட்டார்கள் என்று முன்னாள் இங்கிலாந்து வீரரும், பிரபலமான கிரிக்கெட் வர்னணையாளருமான ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார்.

அதேபோல ஷேவாக்கின் பேட்டிங் ஸ்டைலை உலக கிரிக்கெட் ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். மிகவும் சிறப்பான அதிரடியான வீரராக நீண்ட காலம் நினைவு கூறப்படுவார் ஷேவாக் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் பாய்காட்.

தற்போது இந்திய அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார் ஷேவாக். அதேபோல அவர் ஐபிஎல் போட்டிகளிலும் இன்னும் ஆடாமல் இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். பார்ம் இல்லாதது, கேப்டன் டோணியுடன் மோதல், உள்ளடி பாலிட்டிக்ஸ் என பல காரணங்கள் இதற்குக் கூறப்படுகின்றன.

இந்த நிலையில் பாய்காட் ஷேவாக் குறித்துக் கூறுகையில், இந்தியாவுக்காக இனி ஷேவாக் ஆடும் வாய்ப்பு இல்லை. அவர் அப்படியே ஒதுங்கி விடுவார். சில ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி விட்டு விடை பெற்று விடுவார்.

உலகின் மிகச் சிறந்த ஸ்டைலான, அதிரடியான வீரர் ஷேவாக். நிச்சயம் அதில் சந்தேகம் இல்லை . அதற்காக அவர் நீண்ட காலம் நினைவு கூறப்படுவார். இந்திய கிரிக்கெட்டுக்கு ஷேவாக் ஆற்றிய பங்கு அளப்பறியது.

சிலர் தாங்களாகவே ஓய்வு பெறுவார்கள். சிலர் கட்டாயப்படுத்தப்படுவார்கள். சிலரை தேர்வாளர்களே ஓய்வுக்குத் தள்ளி விடுவர். ஆனால் முடிவு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது வலிக்கத்தான் செய்யும். ஷேவாக்குக்கும் இது பொருந்தும்.

அடுத்த உலகக் கோப்பைப் போட்டியின் போது நிச்சயம் இந்திய அணியில் ஷேவாக் இருக்க மாட்டார். அது உறுதி என்றார் பாய்காட்.

ஷேவாக் இல்லாட்டி உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா பாய்...??

English summary
The former England opener and one of the world's most respected commentators feels Sehwag will fade out slowly after enjoying himself in a few IPL matches. Sehwag will never be forgotten in world cricket for his batting style. Saying he would be missed in international cricket, Geoffrey Boycott feels Virender Sehwag will never play for India again. Sehwag was recently dropped from the Indian Test squad against Australia and did not figure among the probables for the ICC Champions Trophy in June this year.
கருத்தை எழுதுங்கள்