Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

6வது ஐபிஎல் தொடர்: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Posted by:
Updated: Monday, April 15, 2013, 19:05 [IST]
 

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் 17வது லீக் போட்டியில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

ஐபிஎல் 6வது தொடரில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடந்த ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சங்கக்கரா தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தா அணியில் ரையான் மெக்லரனுக்கு பதிலாக சேனநாயகேவும், ஹைதராபாத் அணியில் ஆனந்த் ராஜனுக்கு பதிலாக கரண் ஷர்மாவும் சேர்க்கப்பட்டனர்.

6வது ஐபிஎல் தொடர்: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கம்பீர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிஸ்லா, கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் 3 ரன்களே எடுத்தது. அதன்பின்னர் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.அணியின் ஸ்கோர் 7.4 ஓவர்களில் 59 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. கரண் ஷர்மா பந்து வீச்சை அடித்து ஆடிய மன்விந்தர் பிஸ்லா விஹாரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 24 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் கம்பீருடன் இணைந்த காலிஸ்சும் அதிரடி காட்டினார். கம்பீர் 39 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை கடந்தார். அவர் தொடர்ந்து அடித்த 2-வது அரை சதம் இதுவாகும்.

கம்பீர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆஷிஷ்ரெட்டி பந்து வீச்சில் அவுட் ஆனார். 13.4 ஓவர்களில் அந்த அணி 102 ரன்கள் எடுத்த நிலையில்க் காலிசுடன் இணைந்த இயான் மோர்கன் அதிரடி ஆட்டம் காட்டினார். 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதனால் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அந்த அணியின் ஒயிட் 34 ரன்கள், பெரேரா 36 ரன்கள் அடித்திருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆயினர். இதனால் 20 ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published:  Monday, April 15, 2013, 9:35 [IST]
English summary
Defending champions Kolkata Knight Riders got back to winning ways as they outclassed Sunrisers Hyderabad by 48 runs to notch up their second win in the Pepsi Indian Premier League, here today
கருத்தை எழுதுங்கள்