Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?

Posted by:
Published: Wednesday, April 17, 2013, 17:20 [IST]
 

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
 

டெல்லி: ஐபிஎல் 6வது தொடரில் எந்த ஒரு போட்டியிலுமே வெற்றி பெறாத டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை டெல்லியில் எதிர்கொள்கிறது.

டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் 9 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. 4-வது ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியிடம் 24 ரன்னில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது. சென்னை அணி புனே வாரியர்சை சாதாரணமாக நினைத்ததால் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க நேரிட்டது. நாளைய ஆட்டத்தில் மைக்ஹஸ்சி இடம் பெறலாம். கிறிஸ்மாரிஸ், அல்பி மார்கல், நானஸ் ஆகியோரில் ஒருவர் கழற்றி விடப்படலாம். பலவீனமாக இருக்கும் டெல்லி அணியை சென்னை அணி தனக்கு ஏற்ற வகையில் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி அணி தான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. சூப்பர் ஓவர் வரை வந்து அந்த அணி நேற்று பெங்களூர் அணியிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Battered and bruised after five consecutive losses, Delhi Daredevils would look to infuse some life into their Indian Premier League campaign when they take on an inconsistent Chennai Super Kings at New Delhi on Thursday.
கருத்தை எழுதுங்கள்