Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சூப்பர் ஓவரில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பெங்களூர்!

Posted by:
Updated: Wednesday, April 17, 2013, 9:49 [IST]
 

சூப்பர் ஓவரில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பெங்களூர்!
 

டெல்லி: நடப்பு ஐபிஎல்6வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் முறையாக வெற்றியின் முனைக்குப் போயும் பயனில்லாமல் போனது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சூப்பர் ஓவரில் தோல்வியைத் தழுவியது.

டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல் 6வது தொடரின் 21-வது லீக் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வார்னர்- சேவாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 13 பந்துகளில்15 ரன்களிலும், சேவாக் 23 பந்துகளில் 25 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ஜுனேஜா 16 பந்துகளில் 17, ஜெவர்த்தனே 31 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். கடைசியில் பதான் 8 பந்தில் 19 ரன்களை விளாச டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல் 12 பந்துகளில் 12 ரன்கள், அந்த அணியின் புயலாக வருணிக்கப்படும் கெய்ல் 9 பந்துகளில்13 ரன்களில் அவுட் ஆகினர். பின்னர் கேப்டன் கோஹ்லி- டி வில்லியர்ஸ் இணை சிறப்பாக விளையாடி ரன் சேர்த்த நிலையில் டிவில்லியர்ஸ் 39 ரன்களில் ரன்அவுட் ஆனது பெங்களூர் அணியை அப்செட் ஆக்கியது. அப்போது பெங்களூர் அணி 16 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்திருந்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூர் அணி வெற்றி பெற 24 பந்தில் 24 ரன் தேவைப்பட்டது. 7 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் கடைசியில் ஆட வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதனால் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிந்தது.

இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

திரில்லான சூப்பர் ஓவர் முறை

சூப்பர் ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. கெய்ல்- டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்கள். டெல்லி அணியின் உமேஷ் யாதவ் பந்து வீசினார். முதல் பந்தில் கெய்ல் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் டி வில்லியர்ஸ் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் கெய்ல் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை டி வில்லியர்ஸ் மிஸ் செய்தார். இதனால் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணி எடுத்திருந்தது. 5-வது பந்தில் டிவில்லியர்ஸ் அருமையாக சிக்ஸ் தூக்கினார். 6-வது பந்தையும் அதேபோல் சிக்சர் தூக்கினார். இதனால் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்தது.

இதனால் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் வார்னர்- ரோரேர் களம் இறங்கினர். ராம்பவுல் பந்து வீசினார். முதல் பந்திலேயே வார்னர் அவுட் ஆனார். இரண்டாவது பந்தை சந்தித்த பதான் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் பதான் ரன் அடிக்கவில்லை. 4-வது பந்தில் பதான் அருமையான சிக்சர் அடித்தார். 5-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். 6-வது பந்தை ரோரேர் சந்தித்தார். கடைசி பந்துக்கு 5 ரன் தேவைப்பட்டது. இதனால் மைதானத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ராம்பவுல் பந்து வீச ரோரேர் கிளீன் போல்டானார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 10 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5வது முறையாக தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Wednesday, April 17, 2013, 9:37 [IST]
English summary
Royal Challengers Bangalore made a mess of a simple chase before beating Delhi Daredevils in the Super Over in a thrilling match on Tuesday.
கருத்தை எழுதுங்கள்