Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6 மொகாலி போட்டி- கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது கிங்ஸ்லெவன் பஞ்சாப்!

Posted by:
Published: Wednesday, April 17, 2013, 10:30 [IST]
 

ஐபிஎல் 6 மொகாலி போட்டி- கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது கிங்ஸ்லெவன் பஞ்சாப்!
 

மொகாலி: ஐபிஎல் 6வது தொடரில் மொகாலியில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பஞ்சாப் அணி

மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்- மந்தீப் சிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கில்கிறிஸ்ட் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோல் வோரா 17, ஹசி 12, மில்லர் 20, மெகமூத் 0, குர்கீரத் சிங் 0 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இருப்பினும் தொடக்க வீரரான மந்தீப் சிங் நிலைத்து நின்று 41 ரன்கள் எடுத்தார். 8-வது விக்கெட்டாக களம் இறங்கிய கோனி 18 பந்தில் 42 ரன்கள் எடுத்து அசத்தினார். 20வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

நரைன் ஹாட்ரிக்

கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 15-வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் ஹசியும் 5-வது பந்தில் மெஹ்மூத்தும் 6-வது பந்தில் குர்கீரத் சிங் ஆகியோர் அவுட் ஆனார்கள். நடப்பு ஐ.பி.எல். போட்டியில் இதுவே முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனையாகும் . 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் பந்தில் பிஸ்லா டக் அவுட் ஆனார். அடுத்து வந்த காலிஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு காம்பீர்- மோர்கன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். காம்பீர் 60 ரன்களிலும், மோர்கன் 41 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இதனால் கொல்கத்தா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலை உருவானது.

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 11 ரன் தேவைப்பட்டது. பிரவீன்குமார் பந்து வீசினார். முதல் பந்தில் வைட் மூலம் ஒரு ரன் கிடைத்தது. முதல் பந்தில் இரண்டு ரன் கிடைத்தது. இந்த ரன்னும்' லெக் பைஸ்' மூலம் கிடைத்தது. 2-வது பந்தில் பதான் அவுட் ஆனார். இதனால் 4 பந்தில் 8 ரன் தேவைப்பட்டது. 3-வது பந்தில் சேனநாயகே ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் நரைன் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தில் செனநாயகே ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கடைசி பந்தை வைட் ஆனது. இதனால் ஒரு பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. ஆனால் நரைன் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இதனால் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பெற்றுள்ள 2வது வெற்றி இதுவாகும்.

English summary
Gautam Gambhir stupendous batting and Sunil Narine's splendid hat-trick went in-vain as Kings XI Punjab made a miraculous comeback to stun defending champions Kolkata Knight Riders by four runs in a thrilling Pepsi Indian Premier League encounter.
கருத்தை எழுதுங்கள்