Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மிஸ்ராவின் ஹாட்ரிக்! 11 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்!

Posted by:
Published: Thursday, April 18, 2013, 10:17 [IST]
 

புனே: ஐபிஎல் 6வது தொடரில் புனேயில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அமித் மிஸ்ராவின் ஹாட்ரிக் சாதனையுடன் 11 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸை வீழ்த்தியது.

புனேயில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக காமிரான் ஒயிட் பொறுப்பேற்றார்..குயின்டன் டி காக் இப்போட்டியில் அறிமுகமானார். ரவி தேஜாவுக்கு பதிலாக சமந்த்ரே இடம் பிடித்தார். புனே அணியில் டெய்லர் நீக்கப்பட்டு மாத்யூஸ் சேர்க்கப்பட்டார்.

மிஸ்ராவின் ஹாட்ரிக்! 11 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்!

சன் ரைசர்ஸ் தடுமாற்றம்

டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் மாத்யூஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேல், குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். புனே அணியின் புவனேஷ்குமாரின் பந்து வீச்சை ஹைதராபாத் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. பார்த்திவ் 9 பந்துகளில் 12 ரன்களிலும் குயின்டன் 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தும் அவுட் ஆயினர். பின்னர் வந்த விஹாரி 8 பந்தில் 1 ரன் எடுத்து அவுட் ஆக கேப்டன் காமிரான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் ஹைதராபாத் அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

அந்த அணியின் சமந்த்ரே, அமித் மிஸ்ரா ஆகியோர் மட்டும் கணிசமான ரன்களை எடுத்திருந்தனர். சமந்த்ரே 37 பந்துகளில் 37 ரன்களையும் அமித் மிஸ்ரா 24 பந்துகளில் 30 ரன்களையும் எடுத்திருந்தனர். 20வது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்திருந்தது. புனே வாரியஸ் அணியின் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

புனே வாரியர்ஸ் அணி- மிஸ்ரா ஹாட்ரிக்

120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நம்பிக்கையுடன் புனே வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே புனே வாரியர்ஸ் அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களது பங்குக்கு ரன்களை சேர்த்துக் கொடுத்து அவுட் ஆயினர். உத்தப்பா 22 ரன்கள், பின்ச் 16 ரன்கள், சுமன் 12 ரன்கள், ஸ்மித் 17 ரன்கள், மாத்யூஸ் 20 ரன்கள் , மார்ஷ் 14 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால் கடைசியில் பின் வரிசை வீரர்கள் அனைவரையும் அமித் மிஸ்ரா அடுத்தடுத்து வீழ்த்தி சரித்திரம் பேசும் ஹாட்ரிக் சாதனையை படைத்தார். புவனேஷ்குமார், ராகுல் ஷர்மா, திண்டா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார் அமித் மிஸ்ரா. மணீஷ் பாண்டே மட்டும் 7 ரன்கள் எடுத்தார்.

இதனால் 19வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த புனே வாரியர்ஸ் அணி 108 ரன்களை மட்டுமே எடுத்தது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஹைதராபாத் அணியின் அமித் மிஸ்ரா கைப்பற்றினார்.

English summary
Leg-spinner Amit Mishra produced a stunning performance taking four wickets in five deliveries, including a hat-trick, as Sunrisers Hyderabad pulled off an incredible 11-run victory over Pune Warriors in the Pepsi Indian Premier League, here today.
கருத்தை எழுதுங்கள்