Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரம்! 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! டெல்லிக்கு 6வது தோல்வி!!

Posted by:
Updated: Thursday, April 18, 2013, 23:22 [IST]
 

டெல்லி: ஐபிஎல் 6வது தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக விளையாடி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் வெற்றியைப் பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இது 6வது தோல்வியாகும்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் மைக் ஹசி ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரை டெல்லி அணியின் ஷாபாஸ் நதீம் வீசினார். இந்த ஓவரை பொறுப்புடன் எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ரன்களை எடுத்தது. 2வது ஓவரை இர்ஃபான் பதான் வீசினார். 2வது பந்தை ஹசி பவுண்டரிக்கு அனுப்பினார். பதான் வீசிய 4-வது பந்து விஜய்யின் பேட்டில் பட்டது. ஆனால் பந்து எந்த திசைக்குப் போனது என்று விஜய் யூகிப்பதற்குள் ஹசி ஓடிவந்துவிட வேறுவழியின்றி விஜய்யும் ஓட வேண்டியதாயிற்று. ரன் அவுட் ஆகிவிடுவாரோ என்ற நிலையில் தப்பித்தார் விஜய்.இந்த ஓவரில் 6 ரன்கள் எடுக்கப்பட்டது. 2வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்களை எடுத்திருந்தது.

ஐபிஎல் 6: சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரம்! 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! டெல்லிக்கு 6வது தோல்வி!!
முரளி விஜய் அவுட்- 5 ஓவர் முடிவில் 34/1

3வது ஓவரை மோர்கெல் வீசினார். மோர்கெலின் பந்து வீச்சை சமாளித்து ரன் எடுக்க முடியாமல் சென்னை வீரர்கள் திணறினர். இந்த ஓவரில் 3ரன்கள் அடித்து எடுக்கப்பட்டது. ஒரு ரன் வைட் வீசப்பட்டதால் எக்ஸ்ட்ரா வகையில் கிடைத்தது. இந்த ஓவரின் முடிவில் 15 ரன்களை எடுத்தது சென்னை அணி. 4வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அவரது முதல் பந்தை விஜய் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 4வது ஓவர் முடிவில் சென்னையின் ஸ்கோர் 25ஆனது. மோர்கல் வீசிய 5வது ஓவரில் 2வது பந்தை முரளி விஜய் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் 2வது பந்தில் அவரை மோர்கல் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆக்கினார். அப்போது சென்னை அணி 30 ரன்களை எடுத்திருந்தது. முரளி விஜய் 13 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை எடுத்திருந்தார். களத்தில் இருந்த மைக் ஹசியுடன் சுரேஷ் ரெய்னா இணைந்தார். அவர் வந்த வேகத்திலேயே மோர்கெலின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 5வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களை எடுத்திருந்தது.

நிலைத்த ஹசி -ரெய்னா ஜோடி-10 ஓவர் முடிவில் 60 /1

6வது ஓவரை எதிர்கொண்டது ரெய்னா -ஹசி ஜோடி. பதான் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை ஹசி பவுண்டரிக்கு தள்ளிவிட்டார். 6வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை சென்னை அணி எடுத்தது. 7வது ஓவரை சேவாக் வீசினார். நீண்டகாலத்துக்குப் பின்னர் சேவாக் பந்து வீசியது ஆச்சரியமாக இருந்தது. இந்த ஓவரின் கடைசி பந்தை ரெய்னா பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். இதனால் 7வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களை எடுத்தது சென்னை அணி. பின்னர் 8வது ஓவரை அகர்கர் வீசினார். முதல் பந்தே வைட் ஆனது. இந்த ஓவரில் 50 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஓவரின் முடிவில் 50 ரன்களை மட்டுமே எடுத்தது சென்னை அணி. அகர்கின் கடைசி 5 பந்துகளில் சென்னை அணியால் ஒரு ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை.

9வது ஓவரை நதீம் ஹசிக்கு வீசினார். முதல் பந்து அம்பயரால் வைட் என அறிவிக்கப்பட்டது. இந்த ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது.10வது ஓவரை மீண்டும் அகர்கர் வீசினார். இம்முறை அகர்கரின் பந்துகளில் சிங்கிள்ரன்களை தட்டிவிட்டனர் சென்னை வீரர்கள். 10வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 60 ரன்களை எடுத்தது.

11வது உமேஷ் யாதவ் வீச வந்தார். இனியாவது சென்னை வீரர்கள் அடித்து விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த ஓவரில் அதிரடியாக 2 பவுண்டரிகளை ரெய்னா விளாசினார். ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எட்டியது சென்னை அணி. இந்த ஓவரின் முடிவில் ஹசி- ரெய்னா ஜோடி 39 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை எடுத்திருந்து.

ரெய்னா அவுட்

12வது ஓவரை அகர்கர் வீசினார். 2வது பந்தை மிக அற்புதமாக அடித்த ஹசி அதை சிக்சருக்கு அனுப்பி வைத்தார். இன்றைய போட்டியில் இது முதலாவது சிக்சராகும். 5வது பந்தையும் ஹசி பவுண்டரிக்கு அனுப்பி வைக்க ஆடுகளம் உற்சாகமானது. இப்போது ஹசி-ரெய்னா ஜோடி மட்டும் 50வது ரன்களை எட்டியது. அகர்கரின் ஓவரில் மட்டும் 14ரன்களை எடுத்த சென்னை அணி 12வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 13வது ஓவரை இர்பான் பதான் வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட ரெய்னா அதை பவுண்டரிக்கு பறக்கவிட்டார். இந்த ஜோடியின் அதிரடிக்கு இந்த ஓவரில் இர்பான் பதான் முற்றுப் புள்ளி வைக்க டெல்லி ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். இர்பானின் பந்தை ரெய்னா எதிர்கொண்டு அடிக்க விக்கெட் கீப்பர் ஜாதவ் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்தது. 32 பந்துகளை எதிர்கொண்ட சுரேஷ் ரெய்னா 30 ரன்கள் எடுத்திருந்தார்.

டோணி அதிரடி

32 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களுடன் களத்தில் நிலைத்து நின்ற ஹசியுடன் கேப்டன் டோணி இணைந்தார். அவர் முதல் பந்தையே பவுண்டரிக்கு பறக்கவிட்டு மைதானத்தில் கூடியிருந்த சென்னை ரசிகர்களை துள்ள வைத்தார். 13வது ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்தது. 14வது ஓவரை மோர்கெல் வீசினார். முதல் பந்தில் ரன் அவுட் ஆக வேண்டிய ஹசி தப்பினார். இந்த ஓவரின் 5வது பந்தில் டோணி ஒரு பவுண்டரியை விளாச சென்னை அணி 103 ரன்களை எடுத்தது. 14வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்தது. 15வது ஓவரின் 5வது பந்தில் ஹசி அற்புதமான ஒரு சிக்சரை தூக்கினார். 15வது ஓவர் முடிவில் 116 ரன்களை எடுத்தது சென்னை அணி.

ஹசியின் 8வது அரை சதம்

16வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் ஒரு சிங்கிள் ரன் அடித்த ஹசி தமது அரை சதத்தை எட்டினார். இது ஐபிஎல் போட்டியில் ஹசி அடிக்கும் 8வது அரைசதம். அவர் 41 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். அப்போது டோணி 9 பந்துகளில் 17 ரன்களை எடுத்திருந்தார். 16வது ஓவரின் கடைசி பந்தை டோணி தூக்கி அடிக்க அது அகர்கரின் கையில் பட்டு நழுவியது. இதனால் தப்பினார் டோணி. 16வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எட்டியது சென்னை அணி.

கலக்கிய டோணி-ஹசி ஜோடி

17வது ஓவரை இர்ஃபான் பதான் வீசினார். அடித்து ரன்களை எடுப்பது என்ற முடிவோடு டோணி கிடைக்கும் பந்துகளையெல்லாம் ரன்களாக்கிக் கொண்டிருந்தார். இதற்கு ஹசியும் ஈடுகொடுத்து வந்தார். ஹசி- டோணி ஜோடி மட்டும் 21 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்களை இதுவரை எடுத்திருந்தது. ஒவ்வொரு போட்டியின் தோல்விக்குப் பின்னரும் பாடம் கற்றுக் கொண்டு ஆடுவதுபோல்தான் சென்னை அணியின் ஆட்டம் இருந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸிடம் தோற்ற பிறகு பஞ்சாப் அணியை அற்புதமாக எதிர்கொண்டு ஆடியது. புனே வாரியர்ஸிடம் தோற்றபிறகு நிதானமாக ஆடுகிறது சென்னை அணி. இந்த ஓவரின் கடைசி பந்தையும் ஹசி பவுண்டரிக்குத் தள்ளிவிட்டார். ஓவரின் முடிவில் 131 ரன்களை சென்னை அணி எடுத்தது. கடந்த போட்டியில் தம்மை டோணி நீக்கியது தவறு என உணர வைக்கும் வகையில் ஹசி அதிரடியாக நிலைத்து ஆடி வந்தார்.

ஒரே ஓவரில் 19 ரன்கள்- 3 பவுண்டரி,ஒரு சிக்சர்!

18வது ஓவரை மோர்கல் வீசினார். மோர்கலின் முதல் 2 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கும் பவுண்டருக்கும் அனுப்பி அபாரத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் டோணி. இந்த இருவரும் மட்டும் இணைந்து 29 பந்துகளில் 52ரன்களை எட்டினர். 4வது பந்தில் மைக் ஹசி மீண்டும் ஒரு பவுண்டரியை அழகாக அடித்தார். அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு தள்ளி அசத்தினார் ஹசி. இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்த சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைத் தொட்டது. 19வது ஓவரை அகர்கர் வீசினார். இந்த ஓவரில் 4வது பந்தில் டோணி ஒரு பவுண்டரியை நோக்கி அடித்தார். அது பவுண்டரி லனில் தடுக்கப்பட்டுவிட்டது.2 ரன்கள்தான் கிடைத்தது. விடுவதாக இல்லை டோணி.. 5வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பியே வைத்தார். 19வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது சென்னை அணி.

கடைசி ஓவரில் டோணி அவுட்- 169/4

20வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். உமேஷின் முதல் பந்தை ஸ்டைலாக பவுண்டரிக்கு தள்ளிவிட்டார் டோணி. அப்போது 21 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார் டோணி. 3வது பந்தை தூக்கி அடிக்க அது பவுண்டரி லைனில் இருந்த மெண்டிஸ் கையில் பட்டு கேட்ச் ஆனது. வெல்டன் டோணி! 23 பந்துகளில் 44 ரன்களை எடுத்திருந்தார் அவர். இதில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். தொடர்ந்தும் களத்தில் 65 ரன்களுடன் இருந்த ஹசியுடன் பிராவோ இணைந்து கொண்டார். 20வது ஓவரின் கடைசி பந்தில் பிராவோ ரன் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. சென்னையின் மைஹ் ஹசி 50 பந்துகளில் 65 ரன்களைஎடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ்க்கு தொடக்கமே அதிர்ச்சி -13/2

இதைத் தொடர்ந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது..டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வார்னர், சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சென்னை அணியில் அல்பி மோர்கெல் முதல் ஓவரை வீசினார். அல்பி மோர்கெனில் 5வது பந்தை சேவாக் அபாரமாக சிக்சருக்கு அனுப்பி வைக்க டெல்லி ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். முதல் ஓவர் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 ரன்களைக் குவித்தது. 2வது ஓவரை மொஹித் சர்மா வீசினார். மொஹித்தின் 3வது பந்தில் வார்னர் போல்டு அவுட் ஆனார். அவர் 4 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.அப்போது அந்த அணி 11 ரன்களை எடுத்திருந்தது. சேவாக்குடன் ஜூனேஜா இணைந்து கொண்டார். மொஹித் சர்மாவின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜூனேஜா எல்.பி.டபிள்.யூவில் அவுட் ஆனார். அவர் 3 பந்தில் 2 ரன்களைத்தான் எடுத்தார். 13 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் பறிகொடுத்து அந்த அணி அதிர்ச்சியில் உறைந்தது.

4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள்

8 ரன்களுடன் களத்தில் நின்ற சேவாக்குடன் மகேள ஜெயவர்த்தனே இணைந்தார். 3-வது ஓவரை மோரிஸ் வீசினார்.இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 9 ரன்களை எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. 3வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களை எடுத்தது அந்த அணி. 4வது ஓவரை மீண்டும் மொஹித் சர்மா வீசினார். சென்னை அணியின் பீல்டிங்கிலும் தங்களது பொறுப்பை வெளிப்படுத்தினர். இந்த ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களை எடுத்தது டெல்லி அணி. 5வது ஓவரை மோரிஸ் வீசினார். மோரிஸின் 3வது பந்தை ஜெயவர்த்தனே பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 5வது ஓவரின் 4 வது பந்தில் ஜெயவர்த்தனேவின் அடித்த பந்தை அவுட் ஆக்கியதாக டோணி கேட்டார். ஆனால் அது கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தி கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூவில் ஜெயவர்த்தனே அவுட் ஆனார். அவர் 11 பந்தில் 6 ரன்களை மட்டுமே டுத்தார். 5வது ஓவர் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்களை எடுத்தது.

ரன்சேர்க்க தடுமாற்றம்

6வது ஓவரின் முதல் பந்தில் அதிரடியாக ஆடிவந்த சேவாக்கின் விக்கெட்டை பறித்தார் மொஹித் சர்மா.அவர் 13 பந்துகளில் 17 ரன்களை எடுத்திருந்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். களத்தில் மெண்டிஸும் ஜாதவ்வும் இணைந்தனர். 6வது ஓவரின் கடைசி பந்தில் மெண்டிஸ் அடித்த பந்த் கேட்ச் அவுட் ஆக வேண்டியது.. தப்பித்தார்... இந்த ஓவரின் முடிவில் 32 ரன்களை எடுத்தது டெல்லி அணி. 7வது ஓவரை அல்பி மோர்கெல் வீசினார். மோர்கெலின் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து ரன்கள் சேர்ப்பதிலும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது டெல்லி அணி.

5 விக்கெட் இழப்புக்கு 61ரன்கள்

8வது ஓவரை பிராவோ வீசினார். அவரது 5வது பந்தை ஜாதவ் அடித்த போது அதை பவுண்டரி லைனில் தடுக்கும் வாய்ப்பு சென்னை அணிக்கு கிடைத்தும் கோட்டை விட்டனர். ஒருவழியாக இந்த ஓவரின் முடிவில் 43 ரன்களை எடுத்தது டெல்லி அணி 9வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்களை எடுத்தது. 9வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களை டெல்லி அணி எடுத்தது.. 10 ஓவரை அஸ்வின் வீசினார். 10வது ஓவரின் 5வது பந்தில் அசத்தலான ஒரு பவுண்டரியை டெல்லியின் மெண்டிஸ் வீசினார். 10 வது முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்தது. 11 வது ஓவரை ஜடேஜா வீச முதல் பந்திலேயே மெண்டிஸ் அவுட் ஆனார். 5விக்கெட் இழப்புக்கு61ரன்கள் என்ற நிலைக்கு போனது டெல்லி அணி!12வது ஓவரை மீண்டும் அஸ்வின் வீசினார். இந்த ஓவரிலும் குறிப்பிடும் படியாக ரன்களை சேர்க்க முடியவில்லை. 12வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களையே டெல்லி டேர்டெவில்ஸ் எடுத்தது. 48 பந்துகளிலந்த அணி103 ரன்களை எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

தொடர்ந்து விக்கெட்டுகள் அவுட்- 80/ 8

13வது ஓவரை ஜடேஜாவீசினார். இர்பான் பதான் அடித்த பந்தை பவுண்டரி லைனில் பிராவோ அருமையாக கேட்ச் பிடிக்க இன்னொரு விக்கெட்டை பறிகொடுத்தது டெல்லி அணி. 6வது விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது அந்த அணி. பின்னர் ஜாதவுடன் அகர்கர் இணைந்தார். 14வது ஓவரின் 5வது பந்தில் அகர்கர் அவுட் ஆனார். 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை டெல்லி அணிஎடுத்திருந்தது. 15வது ஓவரின் முடிவில் ஒருவழியாக டெல்லி அணி 80 ரன்களைத் தொட்டது. கடந்த 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது டெல்லி அணி.16வது ஓவரின் முதல் பந்தில் மோர்னே மோர்கெலின் விக்கெட்டைபறிகொடுத்த டெல்லி டேர்டெவில்ஸ் தோல்வியை நோக்கி பயணித்தது. 8 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை அந்த அணி எடுத்தது.

பின்னர் களத்துக்கு வந்த நதீம் அஸ்வின் பந்தில் அவுட் ஆக வேண்டியது. ரெய்னா கேட்ச் பிடிக்க தவறியதால் தப்பித்தார். 16வது ஓவர் முடிவில் 82 ரன்களை எடுத்த டெல்லி அணி 24 பந்தில் 88 பந்தில் எடுத்தாக வேண்டிய கடும் நெருக்கடியில் சிக்கியது.

கடைசி ஓவர்கள் - 82/9

17வது ஓவரின் முதல் பந்தில் நிலைத்து ஆடி 31 ரன்கள் எடுத்த ஜாதவ் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக 9 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. உமேஷ் யாத்வ், நதீமுடன் இணைந்தார். 17வது ஓவரின் முடிவில் 83 ரன்களையே டெல்லி அணியால் எடுக்க முடிந்தது. அந்த அணி 18 பந்துகளில் 87 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது சாத்தியமே இல்லாதது என்பதால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றிகரமாக 6வது முறையாக தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்தது.

86 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!

18வது ஓவரின் 3வது பந்தில் பிராவோ வீசிய பந்தில் உமேஷ் யாதவ் அடித்ததை ரெய்னா கேட்ச் பிடிக்க அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. 3 ஓவரில் 83 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது டெல்லி அணி. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றிலேயே டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவேயாகும்.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்ட 100வது போட்டி இது. இதில் வெற்றி பெற்றதன் மூலம் ஐபில் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50வது வெற்றியையும் பெற்றுள்ளது.

Story first published:  Thursday, April 18, 2013, 17:02 [IST]
English summary
Chennai have won the toss and elected to bat at Delhi Match.
கருத்தை எழுதுங்கள்