Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மும்பை இந்தியன்ஸ் அணியை நொறுக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி! 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Posted by:
Updated: Thursday, April 18, 2013, 19:09 [IST]
 

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 6வது தொடரின் 23வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அதகள ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரரான வாட்சன் 25 பந்துகளில் 31 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பின்னர் தொடக்க வீரரான ரஹானேவுடன் யக்னிக் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். யக்னிக் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரஹானேவுடன் இணைந்த பின்னி 4 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் இணைந்த பிராட் ஹாக்- ரஹானே ஜோடி அவுட் ஆகாமல் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு179 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. ரஹானே 54 பந்துகளில் 68 ரன்களை எடுத்தும் பிராட் ஹாக் 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை நொறுக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி! 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சச்சின், பாண்டிங் ஆகியோர் 1 மற்றும் 4 ரன்களில் அவுட் ஆகினர். 3வது விக்கெட்டாக வந்த தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடினார். 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 42 ரன்களையே மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. அடுத்த 10 ஓவரில் 138 ரன்கள் எடுத்தாக வேண்டிய கடும் நெருக்கடி அந்த அணிக்கு இருந்தது. 32 பந்துகளில் 30 ரன்களை தினேஷ் கார்த்திக் எடுத்தார். பின் வரிசையில் அம்ப்பாத்தி ராயுடுவைத் தவிர அனைவரும் மிகவும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ராயுடு மட்டும் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸின் பந்து வீச்சை அந்த அணியால் தாக்குபிடிக்க முடியவில்லை. 18.2 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 92 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published:  Thursday, April 18, 2013, 9:52 [IST]
English summary
Rajasthan Royals tonight made a strong statement as they left Mumbai Indians bruised and battered with a convincing 87-run win in the Pepsi Indian Premier League (IPL) on Wednesday.
கருத்தை எழுதுங்கள்