Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Posted by:
Updated: Sunday, April 21, 2013, 9:47 [IST]
 

ஐபிஎல் போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஸ்கோர்போர்டு

ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி ஆட்டம்தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த கொல்கத்தா, இருபது ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்தது.

ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கவுதம் கம்பீரும் யூசுப் பதானும் அதிரடியாக ஆடினர். இருவரும் தலா 25 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை. மோரிஸ் பந்துவீச்சில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கம்பீர்.

யூசுப் பதான் ரன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த கல்லிஸ் டக் அவுட் ஆனார். மோர்கன் வெறும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தேப்ரதா தாஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். மனோஜ் திவாரி, ரஜத் பாட்டியா, லக்ஷ்மி சுக்லா, சேனநாயகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சுனில் நரேன் 13 ரன்கள் எடுத்தார். எல் பாலாஜி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

9 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 119 ரன்களை மட்டுமே சேர்த்தது கொல்கத்தா.

சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கிறிஸ் மோரீஸும், டாயன் பிராவோவும், தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

89-க்கு 6 விக்கெட்டுகள்

120 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர் ஹஸ்ஸி, 51 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். அவரது விக்கெட்டை பாலாஜி வீழ்த்தினார். அவருக்குப் பின் அஸ்வின் 11 ரன்களுக்கும், முரளி விஜய் 2 ரன்களுக்கும், சுரேஷ் ரெய்னா 7 ரன்களிலும் வீழ்ந்தனர். கேப்டன் டோணி 9 ரன்களில் வீழ்ந்தார்.

89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னைக்கு கைகொடுத்தது ரவீந்திர ஜடேஜா - பிராவோ ஜோடி. 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்தார் ஜடேஜா. கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். பிராவோ 7 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா அணியில் பாலாஜி, சேனநாயகே, நரேன், யூசுப் பதான், கல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவோ 4-ல் தோற்று 2-ல் மட்டுமே வென்றுள்ளது.

Story first published:  Saturday, April 20, 2013, 17:14 [IST]
English summary
Chennai Super Kings has won the match against Kolkatta Knight Riders by 5 wickets today at Eden Gardens, Kolkatta.
கருத்தை எழுதுங்கள்