Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி!

Posted by:
Published: Sunday, April 21, 2013, 11:21 [IST]
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி!
 

பெங்களூர்: ஐபிஎல் 6வது தொடரில் பெங்களூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் வாட்சன்- ரஹானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆனால் இந்த ஜோடி நிலைத்து ஆடவில்லை. வாட்சன் 6 ரன்னிலும், ரகானே 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு டிராவிட்- பின்னி ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை 66 ஆக உயர்த்திய போது பின்னி 33 ரன்களில் அவுட் ஆனார். களத்தில் இருந்த டிராவிட்டுடன் ஹாட்ஜ் ஜோடி சேர்ந்தார். ஆனால் டிராவிட் 35 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக அந்த அணி 19.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி தரப்பில் வினய்குமார், ஆர்.பி.சிங் தலா 3 விக்கெட்டுகளும், ராம்பவுல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து. பெங்களூர் புயல் கெய்ல்- தில்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பெங்களூர் அணியின் ஸ்கோர் 53 ரன்னாக இருந்த நிலையில் தில்சன் 25 ரன்னில் வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கோஹ்லி, கெய்ல் உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கோஹ்லி அவுட் ஆனார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 7 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் கெய்ல் நிலைத்து நின்று விளையாடினார். இதனால் பெங்களூர் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெய்ல் 49 ரன்னுடனும், திவாரி 25 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

English summary
Opener Chris Gayle struck an unbeaten 49 to complement an impressive display by his bowling colleagues as Royal Challengers Bangalore scored an easy seven—wicket victory over Rajasthan Royals in their Pepsi IPL match here on Saturday.
கருத்தை எழுதுங்கள்