Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது கிங்ஸ்லெவன் பஞ்சாப்!

Posted by:
Updated: Wednesday, April 24, 2013, 18:02 [IST]
 

டெல்லி: ஐபிஎல் 6வது தொடர்பில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்லெவன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. முதல் ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த டெல்லியின் தொடக்க வீரர ஜெயவர்தனே, பிரவீன் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மெர்வ் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் சேவாக்குடன், வார்னர் இணைய ஆட்டம் விறுவிறுப்பானது. 21 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்த சேவாக்கை ஹர்மீத் சிங் அவுட் ஆக்கினார். அதன்பிறகும் டெல்லியின் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஹர்மீத் சிங் 3 விக்கெட்டுகளும், பிரவீன் குமார் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது கிங்ஸ்லெவன் பஞ்சாப்!

இதையடுத்து 121 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரரான கேப்டன் கில்கிறிஸ்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் திரும்பினார். அடுத்து களம் இறங்கிய பொமர்ஸ்பட்ச், சிங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். பொமர்ஸ்பட்ச் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் மில்லர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சிங் 24 ரன்னில் ரன் அவுட் ஆனார்.அடுத்து வந்த வோரா 8 ரன்னிலும், டேவிட் ஹசி 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 17 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 7-ல் தோல்வியைத் தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது,

Story first published:  Wednesday, April 24, 2013, 10:33 [IST]
English summary
Normal service was restored for Delhi Daredevils who followed up an excellent run-chase two nights ago with another sloppy batting performance that formed the basis of their seventh defeat in eight matches. Given first use of a sluggish Feroz Shah Kotla surface on Tuesday evening, the hosts made 120 for 7 which Kings XI Punjab chased down for the loss of five wickets to pocket their fourth win of the season.
கருத்தை எழுதுங்கள்