Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

புனே வாரியர்ஸ் அணியை 130 ரன்களில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ்ர்!!

Posted by:
Updated: Wednesday, April 24, 2013, 18:03 [IST]
 

பெங்களூர்: ஐ.பி.எல் 6வது தொடரில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை 130 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

நேற்றைய போட்டியில். டாஸ் வென்ற புனே அணி பந்துவீச முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல், தில்ஷான் அதிரடியைக் காட்டினர். கெய்ல், தாம் ஒரு புயல் என்பதை நிரூபிக்கும் வகையில் 30 பந்துகளிலேயே சதத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தார். அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்துக் கொண்டே வந்தார். இன்னொரு புறம் தில்ஷான், கோஹ்லி ஆகியொர் அவுட் ஆன நிலையில் டிவில்லியர்ஸ் களத்துக்கு வந்தார். அவர் 8 பந்துகளிலே 31 ரன்களைக் குவித்து நடையைக் கட்டினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் கெய்ல் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே ஐ.பி.எல். போட்டிகளில் தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

புனே வாரியர்ஸ் அணியை 130 ரன்களில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ்ர்!!

இதையடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய புனே அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார் முரளி கார்த்திக். அவரது ஓவரில் புனே தொடக்க வீரர் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். சற்றுநேரம் தாக்குப் பிடித்து ஆடிய ஃபின்ச் 18 ரன்களிலும், ரைட் 7 ரன்களிலும், யுவராஜ் சிங் 16 ரன்களிலும் அவுட் ஆகினர். அதன்பின்னர் ஸ்மித்-மார்ஷ் ஜோடி விக்கெட்டைக் காப்பாற்றுவதற்காக நிதானமாக போராடினர். ஆனாலும் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகினர். புனே வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published:  Wednesday, April 24, 2013, 10:05 [IST]
English summary
It was a Chris Gayle (175 not out and 2/5) show as Royal Challengers Bangalore beat Pune Warriors in convincing fashion in Bangalore.
கருத்தை எழுதுங்கள்