Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: மீண்டும் சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! 5விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது!!

Posted by:
Updated: Friday, April 26, 2013, 0:43 [IST]
 

சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் முந்தைய போட்டிகளைப் போலவே கடைசி ஓவர் வரை சேஸிங் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.4வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 160 ரன்களை எட்டியது.

[ஸ்கோர்போர்டு]

ஹைதராபாத் தொடக்கமே தடுமாற்றம்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேமரூன் ஒயிட் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனால் சென்னை அணி பந்து வீசியது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகார் தாவானும் டி காக்கும் களமிறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொஹித் சர்மா முதல் ஓவரை வீசினார். சர்மாவின் 2வது பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் டி காக். ஆனால் 3வது பந்தை டிகாக் அடிக்க அதை முரளி விஜய் அற்புதமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். முதல் ஓவரின் 3 வது பந்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் விக்கெட்டாக டிகாக்கை 4 ரன்களிலேயே பறிகொடுத்தது. பின்னர் ஷிகார் தவாணுடன் விஹாரி இணைந்து கொண்டார். இந்த ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 6 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஐபிஎல் 6: மீண்டும் சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! 5விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது!!
முதல் 2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புடன் தடுமாற்றம்

2வது ஓவரை ஹோல்டர் வீசினார். இந்த ஓவரில் ரன்களை எடுகக் திணறிக் கொண்டிருந்தனர் ஹைதராபாத் வீரர்கள். சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பீல்டிங்கும் அற்புதமாக இருந்தது. ஓவரின் கடைசி பந்தை ஷிகார் தவான். அப்போது ரன் எடுக்க முயன்ற விஹாரி அவுட் ஆக்கப்பட்டார். அவர் 3 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 2 வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 12 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மைதானத்தில் அவுட் ஆகாமல் இருந்த ஷிகார் தவானுடன் கேப்டன் கேமரூன் ஒயிட் இணைந்து கொண்டார்.

3வது ஓவரை மீண்டும் மொஹித் சர்மா வீசினார். இந்த ஓவரிலும் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது ஹைதராபாத் அணி. முதல் 4 பந்துகளில் 1 ரன்னைக் கூட எடுக்க முடியவில்லை. 5வது பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்திலும் ரன் எடுக்க முடியவில்லை. 3வது ஓவர் முடிவில் 1ரன் கூடுதலாக எடுத்து 2 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. இந்த மந்தமான ரன் சேர்க்கும் போக்கை உடைக்கும் வகையில் 4வது ஓவரை எதிர்கொண்டது ஹைதராபாத்.

பவுண்டரிகளை பறக்க விட்ட தவான்

4வது ஓவரில் ஹோல்டர் வீசிய முதல் 2 பந்துகளை ஷிகார் தவாண் பவுண்டரிகளுக்கு அடுத்தடுத்து அனுப்பி வைத்தார். பின்னர் 4வது பந்தையும் தவான் பவுண்டரிக்கு அனுப்பி வைக்க சற்றே நிம்மதி மூச்சுவிட்டது ஹைதராபாத் அணி. இந்த ஒரு ஓவரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்களை வாரிக் கொடுத்ததால் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 28ஆக அதிகரித்தது.

மீண்டும் விக்கெட் சரிவு

5வது ஓவரை மொஹித் சர்மா வீச முதல் பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் தவான். மீண்டும் 3வது பந்தையும் தவான் பவுண்டரிக்கு தட்டிவிட்டார். ஆனால் இந்த ஓவரின் 5வது பந்தில் கேப்டன் கேமரூன் ஒயிட் அவுட் ஆக்கப்பட்டார். அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது தவாண் 20 பந்துகளில் 23 ரன்களைஎடுத்திருந்தார். பின்னர் தவானுடன் அமித் மிஸ்ரா இணைந்து கொண்டார். 5வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்களை எடுத்ததது ஹைதராபாத்.

6வது ஓவரை அஸ்வின் வீசினார். அஸ்வினின் ஓவரில் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 6வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்களைஎடுத்தது ஹைதராபாத். 7வது ஓவரை ஹோல்டர் வீசினார். இந்த ஓவரின் தொடக்கத்தில் ஹோல்டர் ரன்களை வாரிக் கொடுக்காமல் மட்டுப்படுத்தினார்.முதல் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்திருந்தார் ஹோல்டர். ஆனால் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து அமித் மிஸ்ரா பவுண்டரிகளை விளாசிவிட 7வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புடன் 49 ரன்களை எடுத்தது சன் ரைசர்ச் ஹைதராபாத் அணி.

8வது ஓவரில் 50 ரன்கள்

8வது ஓவரை அஸ்வின் வீசினார். அவரது முதல் பந்தில் ஒரு ரன் தட்டிவிட ஹைதராபாத் அணி 50 ரன்களை எட்டியது. இந்த ஓவரில் ரன்களை அவ்வளவாக எடுக்க முடியவில்லை. ஓவர் முடிவில் 53 ரன்களை எடுத்திருந்தது. 9வது ஓவரை மோரிஸ் வீசினார். ஷிகார் தவான் - அமித் மிஸ்ரா ஜோடிதான் சற்று நிலைத்து ஆடிக் கொண்டிருந்தது. இருவரும் மட்டும் 22 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை எடுத்திருந்தனர். மோரிஸின் 9வது ஓவரின் தொடக்க முதலே ரன்களை எடுக்க முடியவில்லை. கடைசி ஓவரில் பவுண்டரி நோக்கி அடித்த பந்தும் தடுக்கபப்ட்டுவிட இந்த ஓவரில் மொத்தம் 4 ரன்களைக் கூடுதலாக எடுத்தது ஹைதராபாத்.

4வது விக்கெட் வீழ்ந்தது

10வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் ரன்களை எடுக்க ஹைதராபாத் அணி சிரமப்பட்டது. 5வது பந்தில் அஸ்வினின் பந்தை மிஸ்ரா தூக்கி அடிக்க அதை பிராவோ அழகாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார்.மிஸ்ரா 21 பந்துகளில்15 ரன்களை அடித்தார். இதில் 2 பவுண்டரிகள் அடக்கம். பின்னர் ஷிகார் தவானுடன் சற்குணம் இணைந்தார். 10வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

12வது ஓவர் முடிவில் 77/4

11வது ஓவரை மோரிஸ் வீசினார். தொடர்ந்தும் ரன் குவிக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தடுமாறியது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பீல்டிங்கும் அற்புதமாக இருந்தது. இந்த ஓவரின் முடிவில் 67 ரன்களை எடுத்திருந்தது ஹைதராபாத் அணி. ஹைதராபாத் அணியின் ஷிகார் தவாண் மட்டுமே நிலைத்து ஆடி ரன்களைக் குவித்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களில் மிஸ்ராவைத் தவிர யாருமே நிலைக்கவில்லை. அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆயினர். 12வது ஓவரை அஸ்வின் வீசினார். அஸ்வினின் இந்த ஓவரில் 2 பவுண்டரிகளை ஷிகார் தவாண் விளாச 77 ரன்களைத் தொட்டது ஹைதராபாத். 13வது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 82 ரன்களை எட்டியது. அப்போது ஷிகார் தவான் 37பந்துகளில் 44 ரன்கள் என்ற நிலையில் அரைசதத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்.

14வது ஓவரை பிராவோ வீசினார்.இந்த ஓவரின் 3வது பந்தை தவான் அடிக்க முயன்ற போது அப்படி ஒரு சுழல்ன்று வலியால் கீழே படுத்து துடித்தார். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தவானுக்கு உடனடி சிகிச்சை கொடுத்தனர். இருப்பினும் வலியால் துடித்த தவான் பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பதில் இறங்கிய சம்மி முதல் பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார். 14வது ஓவரில் 88 ரன்களைத் தொட்டது ஹைதராபாத்.

5வது விக்கெட் வீழ்ந்தது

15வது ஓவரை ஜடேஜா வீசினார். அவரது 2வது பந்தில் இன்றைய போட்டியின் முதல் சிக்சரை சம்மி அற்புதமாக தூக்கி அடித்தார். 15வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். 16வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சற்குணம் அடித்த பந்தை பிராவோவே அழகாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். அவர் 17 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். 5 விக்கெட் இழப்புக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 98 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் இருந்த சம்மியுடன் ஆஷிஸ் ரெட்டி இணைந்து கொண்டார். இந்த ஓவரின் முடிவில் ஒருவழியாக 100 ரன்களை எட்டியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

17வது ஓவரில் 15 ரன்களைக் கொடுத்த மோரிஸ்

17வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் என மொத்தம் 15 ரன்களை அள்ளிக் கொடுத்தார் மோரிஸ் .18வது ஓவரை பிராவோ வீசினார். 2வது பந்தை எதிர்கொண்டு சம்மி அடித்தார். அதை மோரிஸ் அற்புதமாக கேட்ச் கொடுத்து முந்தை ஓவரில் ரன் கொடுத்ததற்கு பாவ விமோசனம் பெற்றுக் கொண்டார். சம்மி 12 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்தார். மொத்தம் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்திருந்தது ஹைதராபாத். மீண்டும் ஷிகார் தவான் ஆட வந்தார். ஓய்வுக்குப் பின்னர் வந்த ஷிகார் தவான் மீண்டும் அடித்து விளையாடினார். பிராவோவின் கடைசி 2 பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி வைத்து 53 ரன்களை எட்டினார். அவர் எதிர்கொண்ட பந்துகள் 41.

கடைசி 2 ஓவரில் 33ரன்கள்

19வது ஓவரை மொஹித் வீசினார். அவரது முதல் பந்தை ஆஷிஸ் ரெட்டி சிக்சருக்கு அனுப்பினார். 5வது பந்தை பவான் அற்புதமாக பவுண்டரிக்கு திருப்பிவிட்டார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். இந்த ஓவரில் மட்டும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17 ரன்களைக் குவித்தது. 6விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்திருந்தது அந்த அணி. கடைசி ஓவரை பிராவோ வீசினார். அவரது 2வது பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ஆஷிஸ் ரெட்டி.அவர் 12 பந்துகளில் 26ரன்களை எட்டினார். 4வது பந்தில் ரெட்டி மற்றொரு சிக்சர் அடிக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 150 ரன்களைத் தாண்டியது. 5வது பந்தையும் பவுண்டரிக்கு விளாசினார் ரெட்டி.

20வது ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 159 ரன்களைக் குவித்தது.ஷிகார் தவான் 45 பந்துகளில்63 ரன்களுடனும் ஆஷிஷ் ரெட்டி 16பந்துகளில்36 ரன்களுடனுமவுட் அவுட் ஆகாமல் இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 160 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது,

சென்னை சூப்பர் கிங்ஸ் பொறுப்பான சேஸிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மைக் ஹசி, முரளி விஜய் களமிறங்கினர். ஹைதராபாத் அணியின் சம்மி முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் 4 ரன்களை சென்னை அணி எடுத்தது. 2வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். இஷாந்தின் 2வது பந்தை விஜய் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 4வது பந்தும் பவுண்டரிக்கு போனது. ஆனால் எல்லைக் கோட்டிலேயே தடுக்கப்பட்டது. 3 ரன்கள் ஓடியே எடுக்கப்பட்டது. 5வது பந்தைய் ஹசி பவுண்டரிக்கு அனுப்பிவைத்தார். ஓவரின் முடிவில் 17 ரன்களை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

3வது ஓவரை ஸ்டெயின் வீசினார். 2வது பந்தை பவுண்டரிக்கு சூப்பராக அனுப்பி வைத்தார் ஹசி. 5வது வ்பந்தை விஜய் பவுண்டரிக்கு அனுப்பினார். 3வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்களை எடுத்திருந்தது. 4வது ஓவரை சம்மி வீசினார். அவரது முதல் பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சிக்சருக்கு அனுப்பி வைத்தார் ஹசி. கடைசி பந்தில் மற்றொரு பவுண்டரியை தட்டிவிட்டார் 4வது ஓவரின் முடிவில் 42 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

5.2 வது ஓவரில் 52 ரன்கள்

5வது ஓவரை கரன் ஷர்மா வீசினார். இவரது ஓவரின் ரன்கள் எடுக்க சற்றே சிரமப்பட்டனர் சென்னை வீரர்கள்...5வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 46 ரன்களை எடுத்திருந்தது. 90 பந்துகளில்114 ரன்கள் எடுக்க வேண்டியது இருந்தது சென்னை அணி. 6வது ஓவரை அமித் மிஸ்ரா வீசினார். அவரது 2வது பந்தை ஹசி அபாரமாக தூக்கி அடித்து சிக்சருக்கு அனுப்பி வைக்க சென்னை அணி 5.2வது ஓவரில் 52 ரன்களைத் தொட்டது. 5வது பந்தில் முரளி விஜய் அற்புதமாக பவுண்டரிக்கு அனுப்பி வைக்க சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். 6வது ஓவரின் முடிவில் 58 ரன்களை சென்னை அணி எடுத்திருந்தது.

முரளி விஜய் 18 ரன்னில் அவுட்

ஹசி 18 பந்துகளில் 38 ரன்களையும் முரளி விஜய் 18 பந்துகளில்17ரன்களையும் எடுத்திருந்தனர். 7வது ஓவரை கரன் ஷர்மா மீண்டும் வீசினார். கரன் ஷர்மாவின் இந்த ஓவரிலும் சென்னை வீரர்கள் ரன் எடுக்க திணறினர். 2 ரன்களை மட்டுமே இந்த ஓவரில் எடுக்க முடிந்தது.78 பந்துகளில் 100 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது சென்னை. 8வது ஓவரை மீண்டும் மிஸ்ரா வீசினார். மிஸ்ராவின் முதல் பந்தை மிக அற்புதமாக அடித்த ஹசி அதை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார். 3வது பந்தில் ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்டார் முரளி விஜய். அவர் 2 2 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணி 65 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஹசியுடன் ரெய்னா இணைந்து கொண்டார். 8வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களை எடுத்த சென்னை அணி 72 பந்துகளில் 92ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.

10வது ஓவர் முடிவில் 76/2

9வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரில் 7 ரன்களை சேர்ததது சென்னை அணி. 66 பந்தில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை நோக்கி இருந்தது சென்னை அணி. 10வது ஓவரை அமித் மிஸ்ராவீசினார். இந்த ஓவரின் 2வது பந்தில் மைக் ஹசி அவுட் ஆனார். அவர் 26 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை எடுத்திருந்தார். இதில் மைக் ஹசி 5 பவுண்டரிகள்2 சிக்சர்கள் அடங்கும்.அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் இருந்த ரெய்னாவுடன் கேப்டன் டோணி இணைந்து கொண்டார். 10வது ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்களை எடுத்தது சென்னை அணி.

15வது ஓவர் முடிவில் 114/3

11வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் டோணி அற்புதமாக தூக்கி அடித்தார். ஆனால் அவரது பந்தை அழகாக சன் ரைசர்ஸ் அணியின் மிஸ்ரா கோட்டைவிட்டார். இதனால் டோணி தப்பினார். இந்த ஓவரின் முடிவில் சென்னை அணி 84ரன்களை எடுத்திருந்தது. 54 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை...12வது ஓவரை கரன் ஷர்மா வீசினார். இந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. 13வது ஓவரை சம்மி வீசினார். 2வது பந்தை டோணி பவுண்டரிக்கு தட்டிவிட சென்னை அணி 91 ரன்களைத் தொட்டது. 5வது பந்தில் மற்றொரு பவுண்டரியை டோணி அடிக்க சென்னை ரசிகர்களின் துள்ளல் அதிகரித்தது. 13வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு98 ரன்களை எடுத்தது சென்னை அணி.42 பந்தில் 62 ரன்கள் தேவை என்ற நிலை...

14வது ஓவரை மிஸ்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரெய்னா அவுட் ஆனார்.அவர் 13 பந்துகளில்16 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் டோணியுடன் பிராவோ இணைந்தார். இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களைத் தொட்டது சென்னை அணி. சென்னை வெல்ல 36 பந்துகளில் 57 ரன்கள் தேவை.! 4 ஓவர் வீசிய மிஸ்ரா 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

15வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தை தூக்கி அடித்த டோணி அது சிக்சருக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவுண்டரி லைனில் பட்டு தாவியது. அடுத்த பந்தையும் வெளுத்தடித்து பவுண்டரிக்குத் தள்ளிவிட்டார் டோணி டோணியின் விளாசல் சென்னை ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. 15வது ஓவர் முடிவில் சென்னை அணி114 ரன்களை எடுத்தது.

வழக்கம் போல கடைசி ஓவர்கள் பரபரப்பு

16வது ஓவரை கரன் ஷர்மா வீசினார். சென்னை அணி 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி... ஒவ்வொருமுறையும் கடைசி ஓவர்கள் பரபரப்பு என்பது சென்னை அணிக்கு பழக்கமாகிவிட்டது போல.. இந்த ஓவரில் முதல் 6 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கப்படவில்லை. இதனால் மெய்டன் ஓவரானது. சென்னை அணி 24 பந்துகளில் 46 ரன்களை அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை

டோணியின் அபார டபுள் சிக்சர்!

17வது ஓவரை ஸ்டெயின் வீசினார். நெருக்கடியில் இருந்த சென்னை அணிக்கு ஆறுதல் தரும் வகையில் முதல் 2 பந்துகளை கேப்டன் டோணி சிக்சருக்கு அனுப்ப சென்னை அணி ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கை பிறந்தது.. 22 பந்துகளில் 34 ரன்கள் என்ற நிலை வந்தது 17வது ஓவரின் முடிவில் 128 ரன்களை எடுத்தது சென்னை அணி. 18 பந்தில் 32 ரன்கள் தேவை..

18வது ஓவரில் பிராவோ அவுட்

18வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அவர் முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டன. 2வது பந்தை பிராவோ தூக்கி அடிக்க அது அழகாக கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனார். 16 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை மட்டுமே பிராவோ எடுத்தார். சென்னை அணியின் ஸ்கோர் அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 130ரன்கள் என்ற நிலையில் இருந்தது. டோணியுடன் ஜடேஜா இணைந்து கொண்டார். சென்னை அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு டோணி- ஜடேஜா ஜோடிக்கு சேர்ந்தது. இந்த ஓவரின் முடிவில் 132 ரன்கள் எடுத்தது.

12 பந்தில் 28 ரன்கள் தேவை.. டோணி அபாரம்-2 ஆயிரம் ரன்கள்!

19வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தில் 2 ரன்களை டோணி எடுத்தார். அவர் 30 பந்துகளில் 42 ரன்களைஎட்டினார். அடுத்த பந்தை டோணி பவுண்டரிக்கு அனுப்ப சென்னை அணி வெல்ல வேண்டுமெனில் 10 பந்துகளில் 22 ரன்கள் தேவை... என்ற நிலை வந்தது.. அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பி சென்னை ரசிகர்களை குதிக்க வைத்தார் டோணி. 9 பந்துகளில் 16 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தார் டோணி. டோணியும் 52ரன்களைத் தொட்டார்.. ஐபிஎல் போட்டியில் தனது 11வது அரைசதத்தை எட்டினார் அவர். அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் 2ஆயிரமாவது ரன்னையும் தொட்டார் டோணி. 8 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலை...யில் ஜடேஜா அவுட் ஆனார். அவர் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் டோணியுடன் மோரிஸ் இணைந்துகொண்டார்.

6 பந்தில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி.. பரபரப்பு.. த்ரில்

கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தாக வேண்டிய இக்கட்டான நிலையில் ஆஷிஸ் ரெட்டி பந்து வீசினார்..முதல் பந்தை வைட் ஆக வீசினார். இதனால் 146 ரன்களானது. 5 பந்தில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் அற்புதமான ஒரு சிக்சரை தூக்கி அடித்து நெருக்கடியை சற்றே தணித்தார் டோணி. 4 பந்தில் 8 ரன்கள் என்ற நிலையில் 3வது பந்தை எதிர்கொண்டார் டோணி... அந்த பந்தை பவுண்டரிக்குத் தள்ளி விட அது நோ பால் எனபதால் 4 பந்தில் 3 ரன் என்ற நிலை வந்தது...அடுத்த பந்தையும் டோணி பவுண்டரிக்கு விளாசி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை அணி 19.4வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. கேப்டன் டோணி 37 பந்துகளில் 67 ரன்களுடனும் மோரிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

Story first published:  Thursday, April 25, 2013, 10:46 [IST]
English summary
Sun Risers Hyderabad captain Cameron White won the toss and decided to bat against Chennai Super Kings in the IPL 6 34th match at Chennai.
கருத்தை எழுதுங்கள்