Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: டெல்லி அணிக்கு 2வது வெற்றி! புனே வாரியர்ஸூக்கு 7 வது தோல்வி!!

Posted by:
Published: Monday, April 29, 2013, 9:42 [IST]
 

ஐபிஎல் 6: டெல்லி அணிக்கு 2வது வெற்றி! புனே வாரியர்ஸூக்கு 7 வது தோல்வி!!
 

ராய்ப்பூர்: ஐபிஎல் 6வது தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் 39வது ஆட்டம் நேற்று இரவு ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக டெல்லியின் ஜெயவர்த்தனே, ஷேவாக் ஆகியோர் களம் இறங்கினர்..

புனே வாரியர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் ஜெயவர்த்தனே 12 ரன்களிலும் ஷேவாக் 28 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். உன்முக்சந்த் 17 ரன்னில் அவுட் ஆனார் டேவிட் வார்னர் நிலைத்து ஆட்டினார். அவருடன் இணைந்த பென்ரோரர் 13 ரன்னிலும், கேதர் ஜாதவ் 25 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் 5 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது டெல்லி அணி. வார்னர் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்களுடனும், இர்பான் பதான் ஒரு பந்தில் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

புனே வாரியர்ஸ் அணியின் அசோக் திண்டா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே வாரியர்ஸ் களம் இறங்கியது. ராபின் உத்தப்பா, ஆரோன் பின்ச் ஆகியோர் 37 ரன்கள் எடுத்தனர். யுவராஜ்சிங் 31 ரன் எடுத்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களையே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2-வது வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பெற்றுள்ள 2வது வெற்றி இது. புனேவாரியர்ஸ் எதிர்கொண்ட 9 போட்டிகளில் இது 7வது தோல்வி.

English summary
Delhi Daredevils finally brought some cheer to their IPL-6 campaign, beating Pune Warriors by 15 runs.
கருத்தை எழுதுங்கள்