Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

37 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.. டோணி ஆட்டம்!

Posted by:
Updated: Thursday, May 2, 2013, 18:49 [IST]
 

புனே: புனேவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை சென்னை சூப்பர்

கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் டோணி மிகச் சிறப்பாக விளையாடி 16

பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

 37 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.. டோணி  ஆட்டம்!

டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164

ரன்களை எடுத்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி துவக்கத்திலேயே ஹஸ்ஸியின்

விக்கெட்டை இழந்தது. ரிச்சர்ட்சனின் பந்துவீந்தில் 5 ரன்களுடன் மைக்கேல் ஹஸ்ஸி அவுட்

ஆனார். அடுத்ததாக களமிறங்கிய சாகா, ரெய்னாவுடன் இணைந்து விளையாடினார்.

சர்மாவின் பந்துவீச்சில் சாகா 13 ரன்களுடன் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார். இதையடுத்து

ரெய்னாவுடன் பத்ரிநாத் இணைந்தார். இந்தக் கூட்டணி மிகச் சிறப்பாக பேட் செய்தது.

34 ரன்கள் எடுத்த நிலையில் பத்ரிநாத், ரைட்டின் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் ஆகி அவுட்

ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய டோணி சந்தித்த முதல் பந்தையே பவுண்ட்ரிக்கு அடித்தார். அடுத்த

பந்தில் சிக்ஸர் அடித்தார். ரெய்னாவுடன் இணைந்து டோணி மிகச் சிறப்பாக விளையாடினார்.

அவர் 16 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். ரெய்னா அவுட் ஆகாமல் 63 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 164 ரன்களை

எடுத்து ஆட்டத்தை முடித்தது. குறிப்பாக டோணியின் ஆட்டம் தான் சென்னை அணியை

கொஞ்சமாவது பைட்டிங் ஸ்கோருக்குக் கொண்டு சென்றது.

மிகுந்த திணறலுடன் ஆரம்பித்த சென்னை அணி ஒருவழியாக 164 ரன்களை எட்டியது.

புனே வாரியர்ஸ் அணியில் திண்டாவும் ரிச்சர்ட்சனும் மிக அதிகமான ரன்களைக் கொடுத்தனர்.

சர்மா 4 ஓவர்களில் 27 ரன்களைத் தந்து ஒரு விக்கெட்டை (சாகா) வீழ்த்தினார். புவனேஸ்வர்

குமார் 4 ஓவர்களில் 24 ரன்கள் தந்தார்.

ரிச்சர்ட்சன் 4 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் (ஹஸ்ஸி) எடுத்தார். திண்டா 4 ஓவர்களில்

41 ரன்களை அள்ளித் தந்து சென்னை ரசிகர்களின் மனதை 'கொள்ளையடித்தார்'. அதே போல

ஏ.எம்.நாயர் 3 ஓவர்களிலேயே 23 ரன்களைத் தந்தார். ரைட் ஒரே ஓவரில் 12 ரன்கள் தந்து

பத்ரிநாத்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் முதல் 2 ஓவர்களிலேயே 25 ரன்களைத் தாண்டியது.

ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.

பின்ச் மோகித் சர்மாவின் பவுலிங்கில் டோணியிடம் கேட்ச் ஆனார். சுமன், மோகித் சர்மாவின்

பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அதே போல உத்தப்பாவை ரெய்னா அட்டகாசமான ரன் அவுட்

ஆக்கினார்.

இதையடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் மோகித் சர்மாவின் பந்துவீச்சில் டோணியிடம் கேட்ச்

ஆனார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந் நிலையில் 5வது விக்கெட்டையும் இழந்தது புனே வாரியர்ஸ். மோர்க்கலின் பந்துவீச்சில்

ஸ்மித் அடித்த பந்து எதிர் தரப்பில் விக்கெட்டுகளை சாய்க்க லூக் ரைட் ரன்-அவுட் ஆனார்

இதனால் 54 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது புனே வாரியர்ஸ். இந்

நிலையில் அபிஷேன் நாயர் ரன் அவுட் ஆனார். ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே கொஞ்சம் நின்று

நிதானமாக விளையாடினார். ஆனால், ஜடேஜாவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி அவுட்

ஆனார் ஸ்மித்.

இதையடுத்து ரிச்சர்ட்சனுடன் புவனேஷ்குமார் இணைந்தார். ஆனால், ரிச்சர்ட்சன் பந்துகளை அடிக்க,

குமார் பந்துகளை அடிக்க முடியாமல் திணறினார். ஆனால், ஜடேஜாவின் பந்துவீச்சில்

திக்கித்திணறி ஒரு பவுன்ட்ரியை அடித்த அவர் அடுத்ததாக ஒரு சிக்ஸரையும் அடித்தார்.

19வது ஓவரில் மோரிசின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் ஆனார் ரிச்சர்ட்ஸ்சன். அவர் 26

ரன்கள் எடுத்திருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களையே எடுக்க

முடிந்தது. இதன்மூலம் அந்த அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

வென்றது.

மொத்தத்தில் ஆரம்பத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் தடுமாறினாலும் டோணியின் பேட்டிங்கால்

நிமிர்ந்தது. இதையடுத்து மிகச் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக புனே வாரியர்ஸை

எளிதாகவே சுருட்டியது.

புனே அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகயில் 2ல் மட்டும் வென்று, 7ல் தோற்றுள்ளது.

இந்தப் போட்டி உள்பட மீதமுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த சுற்று

குறித்து யோசிக்க முடியும்.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை, புனே அணிகள் இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் 3 ல் சென்னை வென்றது. 2ல் புனே வெற்றிபெற்றது. புனே மைதானத்தில் இவ்விரு அணிகள்

மோதிய 2 போட்டிகளில், சென்னை, புனே அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றன.

இன்றைய போட்டியில் சென்னை அணி வென்று பழி தீர்க்குமா? அல்லது புனே அணி வென்று

கணக்கை நேர் செய்யுமா என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published:  Tuesday, April 30, 2013, 12:51 [IST]
English summary
Suresh Raina's unbeaten half century, a blazing 16-ball 45 not out from captain MS Dhoni and Mohit Sharma's 3 wickets powered Chennai Super Kings to a 37-run victory over Pune Warriors in IPL 2013 here on Tuesday night
கருத்தை எழுதுங்கள்