Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஈழம் பகுதியில் கிரிக்கெட் போட்டி நடத்தும் இலங்கை- வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்க திட்டம்!

Posted by:
Updated: Tuesday, April 30, 2013, 20:13 [IST]
 

 

கொழும்பு: எல்.டி.டி.இ வசம் இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளம் வயதினருக்கான கிரிக்கெட் போட்டி நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தப் போட்டியில் 14 வயதில் இருந்து 19 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சங்கம் சார்பாக அடுத்த மாதம் இரண்டுநாள் கிரிக்கெட் பயிற்சி முகாம் யாழ்பாணத்தில் நடைபெற உள்ளது. அப்போது கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளிலும், கல்லூரிகளும் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் இந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

மட்டக்களப்பில் பயிற்சி

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டி நடத்தப்படுவதைப் போல கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

30 ஆண்டுகளாக போர்

சிறிய தீவான இலங்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் கடந்த 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றதனால் அங்குள்ளவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை.

கிரிக்கெட் போட்டிகள்

போருக்குப் பின்னர் கடந்த சில ஆண்டுகளாகவே யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முரளி கப் டி20 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 19 அணிகள் பங்கேற்றன. இதில் தெற்கு மாகணப் பகுதியைச் சேர்ந்த அணியே வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி 1981ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்தது. ஆனால் அந்த அணியில் தமிழ் பேசும் வீரர்கள் குறைவாகவே இருக்கின்றனர்.

இலங்கை அணியின் பெருமையை உலகறியச் செய்தவர்களில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முத்தையா முரளிதரன், ரசல் ஆர்னால்டு ஆகியோரையே சேரும். தற்போது தமிழக வீரர்களை அதிக அளவில் தேர்வு செய்து விளையாடச் செய்வதன் மூலம் இலங்கை அணி வீரர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விளையாட எந்த எதிர்ப்பும் இருக்காது என்றும் இலங்கை கிரிக்கெட் சங்கம் நம்புகிறது.

சர்வதேச விளையாட்டு

ஏற்கனவே முன்னாள் விடுதலைப் புலிகளில் உள்ள விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Tuesday, April 30, 2013, 17:58 [IST]
English summary
Sri Lanka Cricket is to conduct a talent search for potential youngsters from the former LTTE controlled regions in the North and the East.
கருத்தை எழுதுங்கள்