Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: பிராவோ அபார பந்துவீச்சு!15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை!

Posted by:
Updated: Thursday, May 2, 2013, 19:37 [IST]
 

ஐபிஎல் 6: பிராவோ அபார பந்துவீச்சு!15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை!
 

சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. கடைசி ஓவரில் சென்னையின் பிராவோ அபாரமாக பந்துவீசி பஞ்சாப் அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

சென்னை அணி நிதானம்

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்னை அணியின் ஷாகாவும் மைக் ஹஸ்சியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை பஞ்சாப் அணியின் பிரவீன்குமார் வீசினார். முதல் பந்தில் மட்டும் 2 ரன்களை எடுத்தார் ஷாகா. அடுத்த பந்துகளில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் அடித்தார் ஷாகா. இந்த ஓவரின் முடிவில் 3 ரன்களை மட்டுமே சென்னை அணி எடுத்தது. 2வது ஓவரை டேவிட் ஹஸ்சி வீசினார். முதல் பந்தில் ஷாகா ஒரு ரன் அடிக்க மைக் ஹஸ்சி எதிர் அணியில் உள்ள தனது சகோதரர் டேவிட் ஹஸ்சியை எதிர்கொண்டார். டேவிட் ஹஸ்சியின் முதல் பந்தில் 2 ரன்களை அடித்தார். அடுத்து ஒரு சிங்கிள் ரன் தட்டிவிட மீண்டும் ஷாகா வந்தார். இருவரும் சிங்கிள் ரன்களைத் தட்டிவிட 2வது ஓவரின் முடிவில் 10 ரன்களை எடுத்தது சென்னை அணி.

அதிரடி ஷாகா அவுட்- 5ஓவர் முடிவில் 32/1

முதல் 2 ஓவர்களின் நிதானமான தொடக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் 3வது ஓவரில் பிரவீன்குமாரின் முதல் பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார் ஷாகா. இதேபோல் 4வது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஷாகா. இந்த ஓவரில் மட்டும் 12 ரன்களைக் குவித்தார் ஷாகா. 3வது ஓவரின் முடிவில் சென்னை அணி 22 ரன்களை எட்டியது. 4வது ஓவரை அவானா வீசினார். அவானாவின் முதல் பந்தை மைஹ் ஹஸ்சி பவுண்டரிக்குப் பறக்கவிட்டு தனது ரன் வேட்டைக்கு சுழி போட்டார். ஆனால் இந்த ஓவரின் 5வது பந்தில் ஷாகா, மார்ஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 18 பந்துகளில் 18 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். களத்தில் 9 ரன்களுடன் இந்த மைக் ஹஸ்சியுடன் சுரேஷ் ரெய்னா இணைந்து கொண்டார். 4வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1விக்கெட் இழப்புக்கு 27 ரன்களை எடுத்திருந்தது. 5வது ஓவரை டேவிட் ஹஸ்சி வீசினார். ஹஸ்சியின் 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் ரெய்னா. 5 ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்திருந்தது.

ஹஸ்சி- ரெய்னா பொறுப்பான ஆட்டம்- 10 ஓவர் முடிவில் 69 /1

6வது ஓவரை அவானா வீசினார். வழக்கமாக அதிரடியாக ரன் குவிக்கும் மைக் ஹஸ்சி இன்றைய போட்டியில் நிதானமாகவே விளையாடினார். சுரேஷ் ரெய்னாவும் மிகவும் நிதானத்தைக் கடைபிடிக்க இந்த ஓவரில் கூடுதலாக 4 ரன்கள்தான் எடுக்கப்பட்டது. 7வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். இந்த ஓவரிலும் சென்னை அணி அதிரடியான ரன்களைக் குவிக்கவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் 5வது பந்தில் ரெய்னா ஒரு பவுண்டரி அடித்தார். ஒருவழியாக 7 ஓவரின் முடிவில் சென்னை அணி 44 ஐத் தொட்டது. 8வது ஓவரை டேவிட் ஹஸ்சி வீசினார். 8வது ஓவரிலும் வழக்கம் போல சிங்கிள் ரன்களை மட்டுமே குவித்த் சென்னை அணியின் ரெய்னா, ஹஸ்சி ஜோடி கூடுதலாக 5 ரன்களை எடுத்தது. 9வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். இவரது 2வது பந்தில் ஹஸ்சி 2 ரன்களை அடிக்க சென்னை அணி 50 ரன்களைத் தாண்டியது. 9ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எட்டியது சென்னை அணி. 10வது ஓவரை டேவிட் ஹஸ்சி வீசினார். அவரது முதல் பந்தை பவுண்டரிக்கு வீசினார் ரெய்னா. கடைசி பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார் ரெய்னா. 10ஓவரின் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்திருந்தது,. 23 பந்துகளை எதிர்கொண்ட ஹஸ்சி 23 ரன்களுடனும் 19பந்துகளை எதிர்கொண்ட ரெய்னா 26 ரன்களையும் எடுத்திருந்தனர்.

35 ரன்களில் ஹஸ்சி அவுட்

11வது ஓவரை மன்ப்ரீத் கோனி வீசினார். அவரது முதல் பந்தை அற்புதமான ஒரு பவுண்டரிக்கு வீசினார் மைக் ஹஸ்சி. 3வது பந்தையும் மீண்டும் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ஹஸ்சி. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இந்த ஓவரில் மட்டும் சென்னை அணி 12 ரன்களைத் தட்டிச் சென்றது (81/1). 12வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ஹசி அவுட் ஆனார்.அவர் குர்கீரத் சிங்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஹஸ்சி 29 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார். 27 ரன்களுடன் களத்தில் இருந்த ரெய்னாவுடன் கேப்டன் டோணி இணைந்து கொண்டார். விக்கெட்டை பறித்த சாவ்லாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரெய்னா சாவ்லாவின் 3வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார்.12வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91ரன்களை எடுத்திருந்தது.

2 ரன்னில் டோணி அவுட்- ரெய்னா அரை சதம்!

13வது ஓவரை ராஜகோபால் சதீஷ் வீசினார்.. முதல் பந்தை எதிர்கொண்ட டோணி ரன் எடுக்க முயன்றார். ஆனால் குர்கீரத் சிங்கால் ரன் அவுட் செய்யப்பட்டார் டோணி. 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டோணி பெவிலியனுக்குத் திரும்ப அல்பி மோர்கல் இணைந்து கொண்டார். சதீஷின் 3வது பந்தில் ரெய்னா மற்றொரு பவுண்டரி விளாசினார். ரெய்னா 26 பந்துகளில் 40 ரன்களைத் தொட்டு அரை சதத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். 13வது ஓவரின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எட்டியது. 14வது ஓவரை அவானா வீசினார். முதல் பந்தில் அல்பி மோர்கல் ஒரு ரன் அடிக்க சென்னை அணி 100 ரன்களைத் தொட்டது. இந்த ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 107 ரன்களை எட்டியது. 15வது ஓவரை சாவ்லா வீசினார். முதல் பந்தை ரெய்னா பவுண்டரிக்கு பறக்கவிட்டு அரை சதத்தை நெருங்கினார். இந்த ஓவரின் முடிவில் 32 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரெய்னா. ஐபிஎல் தொடரில் ரெய்னா அடித்த 17வது அரை சதம் இது. 15 ஓவரின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்தது.

கடைசி 5 ஓவர்கள்...ரெய்னா அதிரடி

16வது ஓவரை மன்ப்ரீத் கோனி வீசினார். கோனியில் 3வது பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்து தனது ரன்குவிப்பை தொடர்ந்தார் ரெய்னா. அல்பி மோர்கன் சிங்கிள் ரன்களாக சேர்த்துக் கொண்டிருக்க இந்த ஓவரின் முடிவில் ரெய்னா அற்புதமான ஒரு சிக்சரைத் தூக்கினார். இதனால் இந்த் ஓவரில் கூடுதலாக 16 ரன்களை சென்னை அணி எடுத்தது. ரெய்னா 64 ரன்கள் எடுத்திருந்தார். அல்பி மோர்கல் 11 பந்துகளில் 10 ரன்களை எட்டியிருந்தார். 17வது ஓவரை சதீஷ் மீண்டும் வீசினார். இந்த ஓவரிலும் ரெய்னா அதிரடியைக் காட்டினார். சதீஷின் 3வது பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ரெய்னா. அடுத்த பந்தையும் தூக்கி அடிக்க சிக்சருக்குப் போன வேகத்தில் பவுண்டரி எல்லைக்குள் பட்டு விழுந்தது. இதனால் 4 ரன்களே கிடைத்தது. கடைசி பந்தையும் வெளுத்து அடித்த ரெய்னா அதை சிக்சருக்கு அனுப்பி வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 150 ரன்களை எட்டியது. ரெய்னா 40 பந்துகளில் 75 ரன்களைக் குவித்திருந்தார்.

மோர்கல் கேட்ச் அவுட்-சதத்தை நோக்கி ரெய்னா!

18வது ஓவரை பிரவீன்குமார் வீச முதல் பந்தை சிக்சருக்குத் தட்டிவிட்டு 81ரன்களை எட்டினார் ரெய்னா. 2வது பந்தில் 2 ரன்களை எடுத்தார். இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரெய்னா ஒரு ரன் தட்டிவிட்டார். இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 161ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது சென்னை அணி. 19வது ஓவரை அவானா வீசினார். அவரது இரண்டாவது பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் அல்பி மோர்கல். ஆனால் அடுத்த பந்தை மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அல்பி மோர்கல். மோர்கல் 15 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்தார். 18.3வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணி.

சதமடித்த ரெய்னா! 20 ஓவர் முடிவில் 186/4

46 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரெய்னாவுடன் ஜடேஜா இணைந்து கொண்டார். . ரெய்னாவின் அதிரடி தொடர 19வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 174 ரன்களைக் குவித்தது.கடைசி ஓவர் சுரேஷ் ரெய்னாவுக்கான ஓவராக இருந்தது. 3வது பந்தில் சதமடித்து சதத்தை நெருங்கினார் ரெய்னா... 5வது பந்தில் 1 ரன் எடுத்து 100வது ரன்னை எட்டினார் ரெய்னா. அவர் 53 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரெய்னா அடித்த முதலாவது சதம் இது.

20 ஓவரின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களைக் குவித்தது. ரெய்னா 100 ரன்களுடனும் ஜடேஜா 5 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் பஞ்சாப் அணி வெல்ல 187 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2வது ஓவரில் முதல் விக்கெட் இழப்பு -5 ஓவர் முடிவில் 27/1

பின்னர் பஞ்சாப் அணியின் லூக் போமெர்ஸ்பாச், மந்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சென்னை அணியின் அல்பி மோர்கல் முதல் ஓவரை வீசினார். இரண்டாவது ஓவரை மொஹித் சர்மா வீசினார். அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 7 ரன்களை எடுத்திருந்த போமெர்ஸ்பாச், மொஹித் சர்மாவின் பந்தில் அவுட் ஆனார். அப்போது 13 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. பின்னர் மார்ஷ், மந்தீப் சிங்குடன் இணைந்து கொண்டார். 3வது ஓவரை அல்பி மோர்கல் வீசினார். முதல் 2ஓவரின் ரன் குவிப்பு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. 4வது ஓவரில் மந்தீப்சிங் அடித்த பந்தில் எளிதில் பிடிக்க வேண்டிய பிராவோ தவறிவிட்டுவிட்டார். 4வது ஓவரின் முடிவில் 23 ரன்களை எடுத்தது பஞ்சாப்.

6வது ஓவரில் 2 வது விக்கெட் இழப்பு 37/2

5வது ஓவரை அல்பி மோர்கல் வீசினார். இந்த ஓவரில் 3வது பந்தை எதிர்கொண்ட மந்தீப்சிங் பந்துபட்ட காயத்தால் அவதிப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் ஆடினார். 5வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களை எடுத்தது. 6வது ஓவரை மொஹித் சர்மாவீசினார். அவரது கடைசி பந்தை எதிர்கொண்ட 15 ரன்கள் எடுத்திருந்த மந்தீப்சிங் அவுட் ஆனார். அப்போது பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் டேவிட் ஹஸ்சி இணைந்து கொண்டார். 7வது ஓவர் முடிவில் கூடுதலாக 6 ரன்களையே பஞ்சாப் அணி எடுத்தது. 8வது ஓவரை மொஹித் சர்மா வீசினார். இந்த ஓவரில் டேவிட் ஹஸ்சியும் மார்ஷூம் 2 பவுண்டரிகள் விளாசிவிட 8வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 53 ரன்களை எட்டியது. 9வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்களைக் கூடுதலாக எடுத்து 57 ரன்கள் என்ற நிலையில் இருந்தது பஞ்சாப் அணி. பஞ்சாப் அணியின் ரன் ரேட்டிங் 6.33 ஆக இருந்தாலும் வெற்றிக்கான தேவை என்பது 11.82 என்பதாக இருந்தது. குறிப்பாக 9வது ஓவரின் முடிவில் 66 பந்துகளில்130 ரன்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருந்தது பஞ்சாப் அணி.

22 ரன்னில் டேவிட் ஹஸ்சி அவுட் - 73/3

10-வது ஓவரை மோரிஸ் வீசினார். ரன்குவிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு மோரிஸ் முதல் 4 பந்துகளை வீசியிருந்தார். ஆனால் 5வது பந்தை டேவிட் ஹஸ்சி அழகாக பவுண்டரிக்குத் தட்டிவிட்டார். இந்த ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்களை எடுத்தது பஞ்சாப். 11வது ஓவரை அஸ்வின் வீசினார். அவரது முதல் பந்தை டேவிட் ஹஸ்சி சிக்சருக்கு அனுப்பினார். ஆனால் 3வது பந்தை பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அவர் 16 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். அப்போது பஞ்சாப் அணி 73 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் மார்ஷூடன் மில்லர் இணைந்துகொண்டார்.

ரெய்னா - ஒரு ஓவரில் 19 ரன்கள் - அரை சதம் நோக்கி மார்ஷ்

12வது ஓவரை ரெய்னா வீசினார். ரெய்னாவின் 4வது, 5வது பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார் மார்ஷ். 6வது பந்தை பவுண்டரிக்குப் பறக்கவிட இந்த ஒரு ஓவரில் மட்டும் ரெய்னா , 19 ரன்களை வாரி கொடுத்தார். 12வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களைத் தொட்டது. மார்ஷ் 30 பந்துகளில் 44 ரன்களை எடுத்து அரை சதம் நோக்கி பயணித்தார். 13வது ஓவரை அஸ்வின் வீச முதல் பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார். மில்லர்.... அஸ்வினின் 3வது பந்தில் ஒரு ரன் எடுத்து பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. 13வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 103 ரன்களை எடுத்தது. 42 பந்துகளில் 84 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையை நோக்கி இருந்தது பஞ்சாப் அணி...

42 பந்துகள்... 84 ரன்கள் - மார்ஷ் அரை சதம்-15வது ஓவரில் 122/3

14வது ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தில் மில்லர் சிங்கிள் ரன் எடுத்தார். 2வது பந்தில் இன்னொரு சிங்கிள் எடுக்கப்பட்டது. 3வது பந்தில் மற்றொரு சிங்கிள் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் பவுண்டரி அடித்த மார்ஷ் 34 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவர் ஐபிஎல் போட்டிகளில் அடித்த 14வது அரை சதம் இது. 14வது ஓவர் முடிவில் 112 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி 15வது ஓவரை அஸ்வின் வீசினார். தற்போது ரன் ரேட் விகிதம் 8 என்ற அளவில் இருப்பதால் பஞ்சாப் அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி சென்னைக்கு இருந்தது. ஆனால் அஸ்வினின் ஓவரில் 10 ரன்களை எடுத்தது பஞ்சாப். 15வது ஓவர் முடிவில் 122 ரன்களை எட்டியது அந்த அனி

16வது ஓவரை பிராவோ வீசினார். அவரது 2வது பந்தை மார்ஷ் பவுண்டரிக்கு அனுப்பியதன் மூலம் மில்லர்- மார்ஷ் ஜோடி மட்டும் இணைந்து 50 ரன்களை எட்டியது. இந்த ஓவரில் 11 ரன்களைப் பெற்றது பஞ்சாப் அணி. 16வது ஓவரின் முடிவில் 133 ரன்களை எட்டியது.

இலக்கை எட்டுமா பஞ்சாப் அணி?

24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 17வது ஓவரை எதிர்கொண்டது பஞ்சாப். ரன் ரேட் விகிதம் 8.31 ஆக இருந்தது பஞ்சாப் அணிக்கு. ஆனால் ஒரு ஓவருக்கு ரன் ரேட் விகிதம் தேவை என்பது 13.50 தேவையாக இருந்தது. கடைசி 24 ப்ந்துகளில் பஞ்சாப் இந்த இலக்கை எட்டுமா? சென்னை அணி பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துமா? என்ற வழக்கமான டென்ஷன் கடைசி ஓவர்களில் ரசிகர்களின் தலையில் ஏறிக் கொண்டது.

17வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தை பவுண்டரிக்கு அடித்த அவர் 5வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கே அனுப்பினார். இதனால் வெற்றி இலக்கை பஞ்சாப் எட்டிவிடுமோ என்ற டென்ஷன் அதிகரித்தது. 17வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 145 ரன்களை எடுத்தது. ஒரு ஓவருக்கு 14 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் இருந்தது பஞ்சாப் அணி..

கடைசி 3 ஓவர்... 42 ரன்கள் தேவை

18வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் சென்னை அணி நெருக்கி பீல்டிங் செய்தும் கடைசி ப்ந்தை மார்ஷ் சிக்சருக்கு அனுப்பி ஸ்கோரை உயர்த்தினார். 18வது ஓவரின் முடிவில் 157 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி

12 பந்தில் 30 ரன்கள்

ஒரு ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரை பஞ்சாப் எதிர்கொண்டது. முதல் பந்தை பவுண்டரிக்கு விட்டனர் பஞ்சாப் அணியினர். 3வது பந்தும் பவுண்டரிக்கும் போனது.4வது பந்து பவுண்டரி லைனில் தடுக்கப்பட்டது.5வது பந்தையும் பவுண்டரிக்குப் போக விடாமல் அற்புதமாக தடுத்தனர் சென்னை வீரர்கள். கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த ஓவரின் முடிவில் 168 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி

6 பந்தில் 19 ரன்கள் தேவை

கடைசி 20வது ஓவரில் 6 பந்துகளில் 19 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற த்ரில் நிலை உருவானது. மீண்டும் பிராவோ வீச வந்தார். இவர் இதற்கு முந்தைய ஓவரில் 12 ரன்களைக் கொடுத்திருந்தார். இந்த ஓவரின் ஒவ்வொரு பந்தும் மிக முக்கியமானது என்பதால் ரசிகர்களின் டென்ஷன் உச்சத்தில் இருந்தது.

கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ

முதல் பந்தை பிராவோ வீச அதை எதிர்கொண்ட மார்ஷை அவுட் ஆக்கி தனக்கே உரித்தான் ஆட்டத்தைப் போட்டு ரசிகர்களை துள்ள வைத்தார்... மார்ஷ் 51 பந்துகளை எதிர்கொண்டு 73 ரன்களைக் குவித்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். 5 பந்துகளில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் மில்லருடன் குர்கீரத்சிங் இணைந்தார். 2வது பந்தை பிராவோ வீசினார். குர்கீரத்சிங் அதை தூக்கி அடிக்க மைக் ஹஸ்சி கேட்ச் பிடித்து டக் அவுட் ஆக்கினார். 4 பந்துகளில் 19 ரன்கள் என்ற கடுமைய்8ஆன நெருக்கடிக்கு தள்ளப்பட்டது பஞ்சாப் அணி. சென்னை ரசிகர்களோ வெற்றி நிச்சயம் என்று ஆனந்தக் கூத்தாடினர்.

சென்னையின் த்ரில் வெற்றி உறுதி

மில்லருடன் சதீஷ் இணைந்து கொண்டார். 3வது பந்தை பிராவோ வீச அதை மில்லர் அடித்து 2 ரன்கள் எடுத்தனர். இதனால் 170 ரன்களை எட்டினர். 3 பந்தில் 3 சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் 4வது பந்தை பிராவோ வீசினார். ஆனால் அதில் 1 ரன்னே எடுக்க சென்னையின் த்ரில் வெற்றி உறுதியானது.

5வது பந்தில் சதீஷின் விக்கெட்டையும் வீழ்த்தி அபாரத்தை வெளிப்படுத்தினார் பிராவோ. அப்போது பஞ்சாப் அணி 171 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஒரு பந்துதான் ஆனால் 16 ரன்கள் எடுப்பது சாத்தியமில்லாத நிலையில் மன்பிரீத் கோனி வந்தார். கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை.பஞ்சாப் அணியின் மில்லர் 51ரன்களுடனும் கோனி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

Story first published:  Thursday, May 2, 2013, 11:25 [IST]
English summary
Struggling for form but showing some spark at the same time, Kings XI Punjab will have to brace up for another massive challenge when they take on former champions and tabletoppers Chennai Super Kings in their Pepsi IPL match in Chennai on Thursday.
கருத்தை எழுதுங்கள்