Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

17 ரன்களில் புனே வாரியர்ஸை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

Posted by:
Updated: Friday, May 3, 2013, 18:02 [IST]
 

17 ரன்களில் புனே வாரியர்ஸை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!
 

புனே: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக திவாரி மற்றும் பெங்களூர் புயல் கெய்ல் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி சதம் அடித்த பரபரப்பை ஏற்படுத்திய கெய்ல் நேற்றைய போட்டியில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் வந்த கோஹ்லி 18 பந்தில் 25 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடக்க வீரரான திவாரி 45 பந்தில் அரைசதத்தைக் கடந்து 52 ரன்களில் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் இணைந்த டி வில்லியர்ஸ்- ஹென்ரிக்ஸ் இணை புனே வாரியர்ஸ் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள்.

இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைக் குவித்தது. கடைசி 29 பந்துகளில் 68 ரன்களை எடுத்தது பெங்களூர். டி வில்லியர்ஸ் 23 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னுடனும், ஹென்ரிக்ஸ் 13 பந்தில் பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே வாரியர்ஸ் அணியின் உத்தப்பா- பின்ச் களம் இறங்கினார்கள். பின்ச் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இருப்பினும் உத்தப்பா மட்டும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் விளையாடினார். அவர் 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

Story first published:  Friday, May 3, 2013, 8:56 [IST]
English summary
Uthappa's excellent 45-ball 75-run knock went in vain as Royal Challengers Bangalore defeated Pune Warriors by 17 runs to consolidate their second position in the Pepsi Indian Premier League.
கருத்தை எழுதுங்கள்