Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

Posted by:
Published: Saturday, May 4, 2013, 12:07 [IST]
 

8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!
 

கொல்கத்தா: ஐஎபில் 6வது தொடரின் 47-வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன்- ரகானே களம் இறங்கினர். ரகானே 6 ரன்னில் சேனநாயக்கே பந்தில் அவுட் ஆனார். வாட்சன் உடன் பால்க்னர் இணைந்தார். ஆனால் ரன் எடுத்த நிலையில் இக்பால் அப்துல்லா பந்தில் அவர் அவுட் ஆனார். இருப்பினும் வாட்சன் நிதானமாக ஆடி 34 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய சாம்சன் 40 ரன்களும், ஒவைஷ் ஷா 24 ரன்களும் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. கேப்டன் டிராவிட் 8-வது வீரராக களம் இறங்கி 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதைத் தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக காம்பீரும் பிஸ்லாவும் விளையாடினர்.பிஸ்லா சிறப்பாக 29 ரன்களிலும் காம்பீர் 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் இணைந்த காலிஸ்- யூசுப் பதான் ஜோடி அற்புதமாக ஆடி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தது. கொல்கத்தா அணி 17.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 133 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பதான் 49 ரன்களுடனும், காலிஸ் 33 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

English summary
Defending champions Kolkata Knight Riders thrashed Rajasthan Royals by eight wickets under a tailor-made Eden conditions here today to keep their hopes afloat in the Pepsi Indian Premier League.
கருத்தை எழுதுங்கள்