Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னையின் வெற்றி ஆதிக்கம் நாளையும் தொடருமா? மும்பை இந்தியன்ஸுடன் மோதுகிறது!

Posted by:
Published: Saturday, May 4, 2013, 15:13 [IST]
 

சென்னை: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

கேப்டன் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டத்தில் 9 வெற்றி, 2 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 9 ரன்னில் மும்பை இந்தியன்சிடம் ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது. இந்த தோல்விக்கு சென்னை அணி நாளை பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

சென்னையின் வெற்றி ஆதிக்கம் நாளையும் தொடருமா? மும்பை இந்தியன்ஸுடன் மோதுகிறது!

நாளைய போட்டியில் சென்னை அணி 8-வது வெற்றியைப் பெற்றால் புதிய சாதனையையும் படைக்கும். இதற்கு முன்பு பெங்களூர் அணி 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதே சாதனையாக உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி அந்த சாதனையை சமன் செய்தது. மும்பை இந்தியன்ஸ் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
They have been unconquered at home so far but Mumbai Indians face an arduous task to extend the record as they face a rampaging Chennai Super Kings in their Pepsi IPL match, tomorrow.
கருத்தை எழுதுங்கள்