Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மும்பையின் முக்கிய வீரர்களை சுருட்டிய சென்னை - ஜடேஜாவுக்கு3 விக்கெட்

Posted by:
Updated: Sunday, May 5, 2013, 19:31 [IST]
 

மும்பையின் முக்கிய வீரர்களை சுருட்டிய சென்னை - ஜடேஜாவுக்கு3 விக்கெட்
 

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி பெரும் ரன்குவிப்பைத் தடுத்து நிறுத்தியது.

மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய வேயன் ஸ்மித்தும், சச்சினும் முதலில் ரன் குவிக்கத் தடுமாறினர். பின்னர் ஸ்மித் வேகம் எடுத்தார். அந்த நேரத்தில்சச்சின் டெண்டுல்கர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறு முனையில் தொடர்ந்து அடித்து ஆடிய ஸ்மித், 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருவரும் போன நிலையில் திணேஷ் கார்த்திக் ரன் குவிப்பில்குதித்தார். அதிரடியாகஆடிய அவர் 23 பந்துகளைச் சந்தித்து 23 ரன்களைக் குவித்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக அதிரடி வீரர் போலார்ட் ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

முக்கியவீரர்கள் விழுந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா தன் பொறுப்பில்ரன் குவிப்பைஎடுத்தார். மி்கவும் நிதானமாகவும் அதேசமயம் பொறுப்புடனும் ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்கால், 39 ரன்களைக் குவித்தார்.

ஹர்பஜன் சிங் தன் பங்குக்கு 11 பந்துகளில் 25 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை மும்பை இந்தியன்ஸ் குவித்தது.

Story first published:  Sunday, May 5, 2013, 16:00 [IST]
English summary
Mumbai Indian have won the toss and elected batting first in their encounter with Chennai Super kings in their IPL match.
கருத்தை எழுதுங்கள்