Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மிரட்டிய ஜான்சன்.. ஸ்தம்பித்துப் போன சென்னை - ரொம்பக் கேவலமான தோல்வி!

Posted by:
Updated: Sunday, May 5, 2013, 19:27 [IST]
 

மும்பை: மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் வீசிய அபாரமான பந்து வீச்சாலும் அந்த அணியின் சிறப்பான பீல்டிங்காலும் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த சென்னை வெறும் 79 ரன்களை மட்டுமே எடுத்து 60 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

முன்னணி வீரர்கள் அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல சட் சட் என்று அவுட்டான விதம் ரசிகர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மிரட்டிய ஜான்சன்.. ஸ்தம்பித்துப் போன சென்னை - ரொம்பக்  கேவலமான தோல்வி!

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டு அடக்கி, பெரும் ரன் குவிப்பைத் தடுத்து நிறுத்தினர். இதனால்20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுடன் நின்று போனது.

இதையடுத்து ஆடத் தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் அதிர்ச்சி அளித்தார். 2 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை வெளியேற்றியவர் மிட்சல் ஜான்சன்.

அவர் பெவிலியன் திரும்பிய அடுத்த சில விநாடிகளில் சுரேஷ் ரெய்னாவும் ஜான்சன் பந்தில் போலார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கவே ரசிகர்கள் அதிர்ந்து போயினர்.

அடுத்த சில பந்துகளில் அதே ஜான்சனிடம் பத்ரிநாத்தும் வீழவே சென்னை ஸ்தம்பித்துப் போனது. இவர்கள் எப்படி ஆட்டமிழந்தார்கள் என்பதை கணிக்கவே முடியாத அளவுக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தவண்ணம் இருந்தன.

முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்ட நிலைமை சென்னைக்கு. மைக்கேல் ஹஸ்ஸி மட்டுமே நம்பிக்கை அளித்து வந்தார். ஆனால் அவரையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் பிரக்யான் ஓஜா. ஹஸ்ஸி எடுத்த ரன்கள் 22 ஆகும்.

பின்னர் வந்த கேப்டன் டோணியும் வந்த வேகத்தில் வெளியேறினார். தொடர்ந்து கிறிஸ் மோரிஸ், மோஹித் சென் ஆகியோர் வெளியேற, இறுதியாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். அத்தோடு சென்னையின் கதை முடிந்தது.

சுருக்கமான ஸ்கோர்

ஹஸ்ஸி 22, முரளி விஜய் 2, ரெய்னா 0, பத்ரிநாத் 0, பிராவோ 9, அஸ்வின் 2, டோணி 10, ஜடேஜா 20.

Story first published:  Sunday, May 5, 2013, 18:41 [IST]
English summary
Mumbai Indians bowler Michell Johnson rocked Chennai Super Kings's batting orders and scalped 3 wickets.
கருத்தை எழுதுங்கள்