Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் பிளே ஆப், இறுதிப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மும்முரம்

Posted by:
Published: Sunday, May 5, 2013, 14:59 [IST]
 

ஐபிஎல் பிளே ஆப், இறுதிப்  போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மும்முரம்
 

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் பிளே ஆப் பிரிவு ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

ஐபிஎல் குவாலிபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கி நடந்து வருகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் டெல்லியில் முறையே மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவற்றுக்கான டிக்கெட் விற்பனை விவரம் விரைவில் வெளியிடப்படும்.

புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெறும் அணியும், 2வது இடம் பெறும் அணியும் மே 21ம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

புள்ளிகள் பட்டியலில் 3 மற்றும் 4வது இடம் பெறும் அணிகள் எலிமினேட்டர் பிரிவில் மோதும். இப்போட்டி மே 22ம் தேதி நடைபெறும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் குவாலிபயர் போட்டியில் தோற்ற அணியுடன் மோத வேண்டும். இப்போட்டி மே 24ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும்.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நுழையும். மே 26ம்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

English summary
The online ticket sales of the IPL Qualifier 2 and the final to be played at the Eden Gardens here on May 24 and 26 respectively began from today (May 4) on the official website of the cash-rich Twenty20 league. The ticket sales began at 11am on Saturday. The minimum price of the tickets is Rs 300, the IPL said in a release.
கருத்தை எழுதுங்கள்