Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அட... தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கிர்ஸ்டன்

Posted by:
Published: Friday, May 10, 2013, 16:32 [IST]
 

அட... தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கிர்ஸ்டன்
 

ஜோஹன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணிக்கு புதுமுகம் கொடுத்து புத்துயிர் அளித்து பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக மாறிய கேரி கிர்ஸ்டன் தற்போது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று கூறி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை கிர்ஸ்டன் கேட்டுக் கொண்டுள்ளாராம். இதை கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தனது விலகல் குறித்து கிர்ஸ்டன் தனது கடிதத்தில் தனக்கு தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவி கொடுத்ததற்காகவும், தெரிவித்து வந்த ஆதரவுக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார் கிர்ஸ்டன்.

2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளராக 2வருட கால ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டார் கிர்ஸ்டன். தற்போதைய அவருடைய பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. அதன் பிறகு புதிய பயிற்சியாளரை தென் ஆப்பிரிக்க அணி பெறும்.

குடும்ப காரணங்களுக்காக பதவி விலகுவதாக கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

English summary
Gary Kirsten has opted not to renew his coaching contract with South Africa team, Cricket South Africa (CSA) announced on Friday. The Board of Directors of Cricket South Africa (CSA) on Friday accepted with regret national coach Gary Kirsten's decision not to renew his contract, a report on CSA website said on Friday.
கருத்தை எழுதுங்கள்