Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வாட்சன் புண்ணியத்தால் வென்றது ராஜஸ்தான் - சென்னைக்கு மீண்டும் ஒரு சோக தோல்வி

Posted by:
Updated: Sunday, May 12, 2013, 23:29 [IST]
 

ஜெய்ப்பூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரை அதிரடியாக துரத்திய ஷேன்வாட்சன் அபாரமாக ஆடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

அவரும், ஸ்டூவர்ட் பின்னியும் இணைந்து சென்னையின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளி விட்டனர்.

முன்னதாக அஜிங்கியா ரஹானே, ஜேம்ஸ் பால்க்னர், சஞ்சு சம்சன்ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் டிராவிட் சற்று நிதானமாக ஆடி வந்தார். இருப்பினும் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வாட்சனும், பின்னியும் இணைந்து அணியை வெற்றியின் பக்கம் கொண்டு சென்றனர்.

வாட்சன் புண்ணியத்தால் வென்றது ராஜஸ்தான் - சென்னைக்கு மீண்டும் ஒரு சோக தோல்வி

இருவரும் இணைந்து சென்னையின் பந்து வீச்சை நையப்புடைத்தனர். சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விரட்டினர். வெற்றிக்கு நான்கு ரன்களே தேவைப்பட்ட நிலையில் திடீரென ஷேன் வாட்சன், பிராவோ பந்தில் போல்ட் ஆனார். 39 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதிரடியாக ஆடி 70 ரன்களைக் குவித்தார்.

வாட்சனின் அவுட், ராஜஸ்தானின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. 18வது ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பின்னி ஒரு சிக்ஸ் அடித்து ராஜஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

23 பந்துகளை மட்டுமே சந்தித்த பின்னி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கால் இருந்தார். 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துத வெற்றி பெற்றது ராஜஸ்தான்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு வந்து விட்டது. சென்னையும், ராஜஸ்தானும் தற்போது தலா 20 புள்ளிகளுடன் இருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னைதான் முதலிடத்தில் நீடிக்கிறது.

முன்னதாக பெரிய ஸ்கோரை எட்டும் என்ற எதிர்பார்பபை ஏற்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியில் முக்கிய விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை மட்டுமே எட்டியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஜெய்ப்பூரில் மோதியது. ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கி பின்னர் ரன் குவிப்பு வேகம் பிடித்து சீராக சென்ற நிலையில் மைக்கேல் ஹஸ்ஸியும், அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா மற்றும் கேப்டன் டோணி அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரன் குவிப்பு மட்டுப்பட்டது.

இருப்பினும் முரளி விஜய் மிகச் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தார். அழகாக ஆடிய விஜய் 50 பந்துகளில் 55 ரன்களை எட்டிய நிலையி்ல் ஒரு ரன்னுக்காக ஓடி ரன் அவுட செய்யப்பட்டார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்தது.

ப்யூட்டிஃபுல் ஹஸ்ஸி

மைக்கேல் ஹஸ்ஸியும், முரளி விஜய்யும் இணைந்து நிதானமாக ரன் குவிப்பை விரைவுபடுத்தினர். ஹஸ்ஸி அழகாகவும், நேர்த்தியாகவும் ஆடி வந்த நிலையில், 40 பந்துளில் 40 ரன்கள் எடுத்த நிலையில், பின்னி பந்தில் போல்ட் ஆனார்.

வேகமாக வெளியேறிய ரெய்னா

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா யாரும் எதிர்பாராத நிலையில் கெவன் கூப்பர் பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனார். இவர் எடுத்தது ஒரு ரன்தான்

அதிர்ச்சி தந்த டோணி

தொடர்ந்து 3வது விக்கெட்டாக கேப்டன் டோணி ஆட்டமிழந்தார். 3 பந்துகளைச் சந்தித்து 2 ரன் எடுத்த டோணி, கூப்பர் பந்தில், ஷான் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பிரில்லியன்ட் முரளி

அட்டகாசமாக ஆடி அரை சதம் போட்ட முரளி விஜய், பெரிய ஸ்கோருக்கு நம்பிக்கை ஊட்டி வந்த நிலையில் ஷான் வாட்சன் வீசிய பந்தில் ரன் எடுக்க ஓடினார். ஆனால் பந்து நேராக யாக்னிக்கிடம் போய் விட்டது. இதையடுத்து அவர் ஸ்டம்ப்பை நோக்கி பந்தைப் போட்டு முரளியை ரன் அவுட் செய்து வெளியேற்றினார்.

Story first published:  Sunday, May 12, 2013, 19:57 [IST]
English summary
bounce back hard. They managed to thump Hyderabad in the last match. Their batsmen, who faltered against Mumbai, were the heroes this time as they amassed 223 on the board. Raina played a stupendous innings and Jaipur take on Chennai in the 61st match of the Indian T20 League at the Sawai Mansingh Stadium, Jaipur. The fight for the top four increases day by day and no team can take any of their matches lightly. Chennai have almost qualified for the play-offs. After a heavy defeat against Mumbai, they have shown great character to bounce back hard. They managed to thump Hyderabad in the last match.
கருத்தை எழுதுங்கள்