Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை பந்தாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Posted by:
Updated: Sunday, May 12, 2013, 19:39 [IST]
 

5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை பந்தாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 

ராஞ்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

முன்னதாக முதலில் பேட் செய்த பெங்களூர் அணி மகவும் மோசமாக ஆடி 20 ஓவர்களில் 115 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் அத சேஸ் செய்த கொல்கத்தா, 5 விக்கெட்களை மட்டும் இழந்து 116 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் முக்கியமான இந்தப் போட்டி ராஞ்சியில் இன்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்றுமுதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்லும், சட்டேஸ்ர் புஜாரவும் ரன் எடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கினர். இவர்களில் கெய்ல் சற்று பரவாயில்லை . சமாளித்து ஆடி ரன் குவிப்பை லேசாக விரைவுபடுத்தினார்.

பெங்களூர் பேட்டிங் மகா மோசம். படு சுமார். அனைவருமே அவர்களது பலத்திற்கேற்ப இன்று விளையாடவில்லை. கெய்ல் கூட கட்டையைப் போட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். டிவில்லியர்ஸும் பெரிதாக அடித்து ஆட முடியாம் தவித்தார்.

முழு அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் கூட கெய்ல், டிவில்லியர்ஸ் மட்டுமே சற்றே சிறப்பாக ஆடி பெங்களூரின் மானத்தைக் காப்பாற்றினர்.

20 ஓவர்களை கஷ்டப்பட்டு சமாளித்த பெங்களூர் அணி 9 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

கொல்க்ததாவின் சுனில் நரைன் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். பாலாஜி, காலிஸ் தலா 2 விக்கெட்களையும், சேனநாயகே ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய கொல்கத்தா அணிக்கு பிஸ்லாவும், கம்பீரும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் அனுபவ வீரர் கல்லிஸ் அபாரமாக ஆடிரன் குவிப்பை ஸ்திரப்படுத்தினார்.அதேபோல மணீஷ் திவாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் 116 என்ற எளிதான இலக்கை மிகவும் சிரமப்பட்டே எட்டியது கொல்கத்தா என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழ்புக்கு 116 ரன்களை ஒரு பவுண்டரி மூலம் எட்டியது கொல்கத்தா.

Story first published:  Sunday, May 12, 2013, 17:48 [IST]
English summary
Royal Challengers Bangalore scored 115 runs with the loss of 9 wkts in their match against Kolkata Knight Riders.
கருத்தை எழுதுங்கள்