Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னை சேப்பாக்கம் கேலரிகளுக்கு சீல்- சுப்ரீம் கோர்ட்டில் கிரிக்கெட் சங்கம் முறையீடு!

Posted by:
Published: Monday, May 13, 2013, 13:08 [IST]
 

சென்னை சேப்பாக்கம் கேலரிகளுக்கு சீல்- சுப்ரீம் கோர்ட்டில் கிரிக்கெட் சங்கம் முறையீடு!
 

சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக சீல் வைத்தது. இந்த சீல் வைப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு செய்திருக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 கேலரிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 கேலரிகளையும் நிரந்தரமாக பயன்படுத்தலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், சேப்பாக்கம் மைதானத்தின் 3 புதிய கேலரிகளையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இதைத் தொடர்ந்து 3 கேலரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சீல் வைத்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு செய்திருக்கிறது.

நாளை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
On Sunday morning, the Chennai Corporation sealed three stands at M.A. Chidambaram Stadium, ahead of Tuesday’s IPL match — the last to be played in the city this season.
கருத்தை எழுதுங்கள்