Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நின்னு அடிச்ச 'கில்லி': கெய்ல் 77.. பதிலுக்கு கில்கிறைஸ்ட் 84 - பஞ்சாபுக்கு 'பலே' வெற்றி!

Posted by:
Updated: Wednesday, May 15, 2013, 11:28 [IST]
 

பெங்களூர்: பெங்களூரில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை புரட்டிப் போட்டு வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

பெங்களூர் அணியில் கெய்ல் புயல் போல ஆடினார் என்றால் பதிலடியாக பஞ்சாப் அணியில் அதன் கேப்டன் கில்கிறைஸ்ட் அதிரடியாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் போட்டியை தன் அணியின் பக்கம் திருப்பிக் கொண்டார்.

முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஆடிய பெங்களூர் அணியில் கெய்ல் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். அவரும் விராத் கோஹ்லியும் இணைந்து பின்னி எடுத்தனர்.

நின்னு அடிச்ச 'கில்லி': கெய்ல் 77.. பதிலுக்கு கில்கிறைஸ்ட் 84 - பஞ்சாபுக்கு 'பலே' வெற்றி!

கெய்ல், 53 பந்துகளில் 77 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் கோஹ்லி, 57 ரன்களைக் குவித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களைக் குவித்தது பெங்களூர்.

இதையடுத்து பெரிய ஸ்கோரை சேஸ் செய்யத் தொடங்கிய பஞ்சாப்புக்கு கேப்டன் ஆடம் கில்கிறைஸ்ட் அட்டகாசமான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிரடியாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைக் குவி்தார். அதேபோல அஸார் மஹமூதும் சிறப்பாக ஆடி 41 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார்.

18.1 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து, 176 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Story first published:  Tuesday, May 14, 2013, 19:54 [IST]
English summary
Captain Gilchrist powered Kings XI Punjab to an emphatic win over RCB in today's match.
கருத்தை எழுதுங்கள்