Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது சென்னை - மீண்டும் முதலிடம்

Posted by:
Updated: Tuesday, May 14, 2013, 23:51 [IST]
 

சென்னை: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இப்போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ஸியும், முரளி விஜய்யும் ஆரம்பத்தில் அடித்து ஆடுவது போல ஆடினர். ஆனால் பின்னர் நிதானித்தனர். பிறகு பிக்கப் ஆனபோது முரளி விஜய் ரன் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 31 ரன்களைக் குவித்தார்.

தொடர்ந்து மைக் ஹஸ்ஸி போத்தா பந்தை அடித்து அதை ஷேவாக் கேட்ச் செய்து அவட்டாக்கினார். அவர் 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது சென்னை - மீண்டும் முதலிடம்

அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 7 ரன்கள் எடுத்த நிலையில், வான்டெர் மெர்வ் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

4வது விக்கெட்டாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வீழ்ந்தார். நன்றாக ஆடி வந்த ஜடேஜா, 17 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்தார்.

இருப்பினும் கேப்டன் டோணி பொறுப்பாகவும், அதிரடியாகவும் ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்த காரணமாக அமைந்தார். 35 பந்துகளை மட்டமே சந்தித்த அவர் 58 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நான்கு சிக்ஸர்கள் இதில் அடக்கம் - இதில் ஒன்று இமாலய சிக்ஸர்.

பின்னர் 179 என்ற இலக்குடன் சேசிங்கைத்தொடங்கிய டெல்லிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஷேவாக் டக் அவுட் ஆனார். பின்னர் போத்தாவுடன் இணைந்து உன்முக்த் அடித்து ஆடத் தொடங்கினார். ஆனால், 16 ரன்களில் உன்முக்த் ஆட்டமிழந்தார். தொடர்ந்து போத்தா 23, பென் ரோரர் 4, ஜாதவ் 2 ரன்களில் வெளியேற டெல்லியின் சிக்கல் கூடிப் போனது.

டேவிட் வார்னர் மட்டும் கடுமையாகப் போராடிப் பார்த்தார். அவர் ஆடிக் கொண்டிருந்தவரை டெல்லிக்கு நம்பிக்கை ஓரளவு இருந்தது. ஆனால் 40 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் வெளியேறியபோது கூடவே வெற்றி வாய்ப்பும் கிளம்பிப் போய் விட்டது.

இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை மட்டுமே டெல்லி எடுத்ு 33 ரன்கள் வித்தியாசத்தி்ல தோல்வியைத் தழுவியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அல்பி மார்க்கல் 3 விக்கட்களை வீழ்த்தினார். அஸ்வின், பிராவோ, மொஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.

Story first published:  Tuesday, May 14, 2013, 20:09 [IST]
English summary
Chennai Super Kings have won the toss and are batting first.
கருத்தை எழுதுங்கள்