Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது: பிசிசிஐ

Posted by:
Published: Thursday, May 16, 2013, 13:13 [IST]
 

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது: பிசிசிஐ
 

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்யப்பட்டது அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் இன்று காலை டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த 3 பேரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அது மேலும் தெரிவித்துள்ளது. ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான விசாரணையில் டெல்லி போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அது உறுதியளித்துள்ளது.

English summary
BCCI on Thursday said it was "shocked and saddened" to hear the arrest of three players for their alleged involvement in spot-fixing in the ongoing Indian Premier League (IPL 2013).
கருத்தை எழுதுங்கள்