Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: சென்னையின் சொதப்பல் சேஸிங்... பெங்களூர் அணி 24 ரன்களில் வென்று உயிர் பெற்றது!

Posted by:
Updated: Wednesday, May 22, 2013, 10:56 [IST]
 

பெங்களூர்: மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மழை காரணமாக இப்போட்டி தலா 8 ஓவர்கள் கொண்டதாக சுருக்கப்பட்டது. முதலில் பெங்களூர் அணி ஆடி 106 ரன்கள் எடுத்தது. அதையடுத்து சேஸ் செய்ய ஆரம்பித்த சென்னை சரியாக விளையாடாமல் 6 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால் வாழ்வா?சாவா நெருக்கடியில் இருந்த பெங்களூர் அணிக்கு உயிர் கிடைத்தது.

முன்னதாகடாஸ்வென்ற சென்னை கேப்டன் டோணி பீல்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூர் முதலில் பேட் செய்தது. விராத் கோஹ்லி ஓப்பனிங் இறங்கினார். சிறப்பாக ஆடிய அவரை கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களைக் குவித்தார். 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எட்டியது. இதனால் சென்னை அணி வெல்ல 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கோஹ்லி 29 பந்துகளில் 56 ரன்களுடனும் ஹென்ரிக்ஸ் 3 பந்துகளில் 12 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

ஐபிஎல் 6: சென்னையின் சொதப்பல் சேஸிங்... பெங்களூர் அணி 24 ரன்களில் வென்று உயிர் பெற்றது!

சென்னை சொதப்பல் சேஸிங் 2 ஓவருக்குள் 2 விக்கெட்!.

இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹஸ்சி, முரளி விஜய் ஆகியோர் வழக்கம் போல தொடக்க வீரர்களாக களம் இற்ங்கினர். பெங்களூர் அணியின் ரவி ராம்பால் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு பவுண்டரியைப் போட்டு மைக் ஹஸ்சி சுழி போட்டுவைத்தார். இந்த ஓவர் முடிவில் 7 ரன்களை எட்டியது சென்னை. 2வது ஓவரை ஜாஹிர்கான் வீசினார். இந்த ஓவர் சென்னைக்கு செம அதிர்ச்சியாக இருந்தது. 3வது பந்தில் ஹஸ்சி அவுட் ஆனார். அவர் 5 பந்துகளில் 6 ரன்களை எடுத்தார். பின்னர் களத்துக்கு வந்த ரெய்னா அடுத்த பந்திலேயே டக் அவுட் ஆக சென்னை அதிர்ச்சி அடைந்தது. 5 ரன்களுடன் களத்தில் நின்ற முரளி விஜய்யுடன் பின்வரிசை ஆட்டக்காரரான பிராவோ இணைந்து கொண்டார். 3வது ஓவரை உனாத்கத் வீசினார். இந்த ஓவரிலும் சொல்லிக் கொள்ளும்படியாக ரன்களை சென்னை அணி குவிக்கவில்லை. 3வது ஓவர் முடிவில் 19 ரன்களை எடுத்தது சென்னை.

4வது ஓவரை வினய்குமார் வீசினார். வழக்கமான ரன்ரேட் விகிதத்தில் சென்னை அணி விளையாடியது. ஆனால் தேவையான ரன்ரேட் விகிதமோ 3 மடங்கு அதிகமாக இருந்தது. என்னடா சென்னை அணி இப்படி ஆடுகிறதே என்று ஏங்கிய ரசிகர்களுக்கு இந்த ஓவரின் 5வது பந்தில் பிராவோ ஒரு வாணவேடிக்கை காட்டினார். அற்புதமான சிக்சர் அது..ஆனால் அடுத்த பந்தில் பிராவோ அவுட் ஆனார். அவர் 9 பந்தில் 11ரன்களையே எடுத்திருந்தார்.

24 பந்தில் 78 ரன்கள் தேவை..

24 பந்தில் 78 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோணி களமிறங்கினார். சென்னையின் சொதப்பல் சேஸிங்குக்கு டோணி முற்றுப் புள்ளி வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். 5வது ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 18 பந்துகளில் 70 ரன்கள் என்ற நெருக்கடியான நிலையில் சென்னை அணி!

தோல்வியை நோக்கி சென்னை

6வது ஓவரை ஆர்பிசிங் வீசினார்.. அவரது பந்தை முரளி விஜய் சிக்சருக்கு அனுப்பி வைத்தார்...இந்த ஓவரின் 4வது பந்திலும் முரளி அற்புதமாக மற்றொரு சிக்சருக்கு அடிகக் சென்னை அணி 51 ரன்களைத் தொட்டது. 6வது ஓவர் முடிவில் சென்னை அணி 56 ரன்களைத் தொட்டது. 12 பந்தில் 55 ரன்களை அடித்தாக வேண்டிய நெருக்கடியில்சிக்கியது சென்னை. ஏதாவது அற்புதம் நடந்தால் மட்டுமே சென்னை அணி வெல்ல முடியும் என்ற நிலையில் தோல்வியை நோக்கி அந்த அணி சென்றது.

7வது ஓவரை ரவி ராம்பால் வீசினார். முதல் பந்திலேயே முரளி விஜய் கெய்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தார். 4 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த டோணியுடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில்தான் டோணி ஒரு சிக்சரை அடித்தார். அந்த பந்து மைதானத்தை விட்டே வெளியே போய் விழுந்தது. இந்த ஓவரின் முடிவில் 68 ரன்களை எடுத்தது.

கடைசி ஓவர் டோணி, ஜடேஜா அவுட்

இதனால் 6 பந்தில் 39 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை சென்னைக்கு. 6 பந்தையும் சிக்சர் அடித்தாலும் வெற்றி சாத்தியம் இல்லை...இதனால் பெங்களூர் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரை ஜாஹிர் கான் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கும் 2வது பந்தை சிக்சருக்கும் டோணி அனுப்பி வைத்தார். 4வது பந்தையும் உயர அடித்தார் டோணி. ஆனால் உனாத்கத் அதை கேட்ச் செய்து டோணியை வெளியேற்றினார். 10 பந்துகளில் டோணி 24 ரன்களை எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். கடைசி 2 பந்தில் 29 ரன்கள் என்ற நிலையில் பத்ரிநாத் இணைந்தார். 5வது பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

8 ஓவர் முடிவில் சென்னை அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உயிர் பிழைத்துக் கொண்டது. சென்னை தோல்வியைத் தழுவினாலும் ப்ளே ஆப் சுற்றில் இருப்பதால் சிக்கல் இல்லை.. பெங்களூர் அணிக்கு ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Story first published:  Saturday, May 18, 2013, 20:36 [IST]
English summary
Bangalore have to win today’s match against Chennai and hope that Kolkata beats Hyderabad on Sunday to qualify for the play offs. But The situation is not good in Bangalore. It is raining heavily at the stadium. It had eased off for some time and the super-soppers were in operation, but the rain has come back.
கருத்தை எழுதுங்கள்