Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ட்விட்டரில் செய்தியாளருடன் சண்டை போட்டு பிரச்சனையில் சிக்கிய டேவிட் வார்னர்

Posted by:
Published: Sunday, May 19, 2013, 17:05 [IST]
 

ட்விட்டரில் செய்தியாளருடன் சண்டை போட்டு பிரச்சனையில் சிக்கிய டேவிட் வார்னர்
 

சிட்னி: ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் டுவிட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்(26). ஐபிஎல் போட்டிகள் பற்றி நியூஸ் லிமிடெட்டைச் சேர்ந்த செய்தியாளர் ராப்ர்ட கிராட்டாக் செய்தி வெளியிட்டார். இதைப் பார்த்த வார்னர் ட்விட்டரில் நியூஸ் லிமிடெட் செய்தியாளர்கள் ராபர்ட் கிராட்டாக் மற்றும் மால்கம் கன் ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக எழுதியிருந்தார்.

இதைப் பார்த்த கிராட்டாக் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் கான் பதிலுக்கு ட்வீட் செய்ய வார்னரும் அவரும் ட்விட்டரில் மோதியுள்ளனர். இத்தனை கூத்தும் இன்று காலை தான் நடந்துள்ளது. இந்நிலையில் வார்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மால்கமிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.

வார்னர் நாடு திரும்பிய பிறகு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து வார்னரிடம் விசாரணை நடத்தப்படும் நாள் மற்றும் நேரம் நாளை அறிவிக்கப்படுகிறது.

English summary
Australian cricket player David Warner has been accused of breaching Cricket Australia's (CA) Code of Behaviour after attacking Robert Craddock and Malcolm Conn, two Australian journalists for News Limited in Twitter.
கருத்தை எழுதுங்கள்