Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இன்றோடு முடியும் ஐபிஎல் லீக் போட்டிகள்

Posted by:
Published: Sunday, May 19, 2013, 17:09 [IST]
 

 

சென்னை: 6வது ஐபிஎல் தொடரின் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.

இந்தப் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் பிரிவில் நுழையும் 4வது அணி எது என்று தெரிய வரும்.

6வது ஐபிஎல் தொடரின் சுற்றுப் போட்டிகள் பெரும் விறுவிறுப்பு, ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சைகளுடன் இன்று முடிவுக்கு வருகின்றன. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் பிரிவுக்கு தகுதி பெற்று விட்டன.

4வது அணி எது என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. 4 மணிக்குத் தொடங்கிய போட்டியில் புனே வாரியர்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன. இதில் யார் வென்றாலும், தோற்றாலும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை.

வெல்லும் அணி 8வது இடத்தையும், தோற்கும் அணி கடைசி இடமான 9வது இடத்தையும் பெறும்.

அதேசமயம், 2வது நடைபெறும் போட்டியின் முடிவு முக்கியமானது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன. இதில் ஹைதராபாத் வென்றால் பிளே ஆப் பிரிவுக்குள் நுழையும். தோற்றால் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத்தா அல்லது பெங்களூரா என்பது தெரிய வரும்.

ஆனால் தற்போது நெட் ரன் ரேட்டில் பெங்களூரே முன்னணியில் உள்ளது. எனவே வென்றால் மட்டுமே ஹைதராபாத்துக்கு நல்லது.

முதல் பிளே ஆப் 22ம் தேதி

முதல் பிளே ஆப் போட்டி 22ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸும் 4வது இடத்தைப் பிடிக்கும் அணியும் மோதும்.

அதில் வெல்லும் அணி, 2வது குவாலிபையர் போட்டியில் சென்னை- மும்பை போட்டியில் தோற்கும் அணியுடன் 24ம் தேதி கொல்கத்தாவில் மோதும்.

26ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

Read more about: ipl 6, ஐபிஎல் 6
English summary
League round matches of IPL 2013 wil lcome to an end today with last 2 matches.
கருத்தை எழுதுங்கள்