Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை புரட்டிப் போட்ட சென்னை

Posted by:
Updated: Tuesday, May 21, 2013, 23:43 [IST]
 

டெல்லி: டெல்லியில் நடந்த ஐபிஎல்-6 முதல் ப்ளே ஆப் சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

சென்னை வீரர்கள அதிரடியாய் பேட்டிங் செய்து 192 ரன்களைக் குவித்தனர்.

டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய சென்னை அசத்தலாக பவுண்ட்ரியுடன் தொடங்கியது.

ஹசி தனது ஸ்டைலில் முதல் பந்தினை பவுண்டரிக்கு தட்டினார். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை தவறவிட்டார் ஹசி.

48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை புரட்டிப் போட்ட சென்னை

சுதாரித்த மும்பை இன்டியன்ஸ் அணி பீல்டிங்கை சரியாக கையாண்டது. முரளி விஜய் எதிர் கொண்ட பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் ஓவரில் ஒரு பவுண்ட்ரி இரண்டு ஒரு ரன்கள் என 6 பந்துகளுக்கு 6 ரன் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது ஓவரில் அடுத்த பவுண்ட்ரி முரளி விஜய் விளாசினார். இருவருமே நிதானமாக ஆடினர்.

மீண்டும் பவுண்ட்ரி முரளி விஜய் அசத்தலாக ஆடி முதல் பவுண்ட்ரியை பதிவு செய்தார். அடுத்த பந்தில் ரன்கள் எடுக்க முடியாவிட்டாலும் அடுத்தடுத்து இரண்டாவது ஓவருக்கு 18 ரன்கள் எடுத்தது சென்னை அணி. ஹசி முரளி விஜய் ஜோடி ஆட்டம் அசத்தலாக இருந்தது. அடுத்தடுத்து பவுண்ட்ரிகள் விளாசியதில் சென்னை அணி 5 வது ஓவர் முடிவில் 39 ரன்கள் எடுத்தது.

6வது ஓவர் முடிவில் சென்னை அணி ஸ்கோர் 47 ரன்களை கடந்தது.6.5 ஓவரில் 50 ரன்களை கடந்தது சென்னை அணி.

முரளி விஜய் அவுட்:

7வது ஓவரிலும் அதிரடியாக ஸ்கோர் செய்தது சென்னை அணி. முரளி விஜய் 7.2 ஓவரில் டித்து ஆட முற்பட கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார். 8வது ஓவர் முடிவில் ஸ்கோர் 55/1 9 வது ஓவர் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஹசி ரெய்னா ஜோடி ஒரு பவுண்ட்ரியோடு 4 ஒற்றை ரன்களை எடுத்து 8 ரன்ளை சேர்த்தது. 9 வது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 63 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து ஹஸ்ஸியும் ரெய்னாவும் இணைந்து மிகச் சிறந்த பேட்டிங் செய்தனர். 15 ஓவர்களில் சன்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 192 ஆக உயர்த்தினர். சென்னை அணியின் ஆட்ட முடிவில் ஹஸ்ஸி 86 ரன்கள், ரெய்னா 82 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம் மும்பை அணிக்கு 193 ரன்களை சென்னை அணி இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி திணறலுடன் ஆரம்பித்தது. டிவைன் ஸ்மித்தும், ஆதித்ய தாரேயும் முதலில் களமிறங்கினர். ஆனால், 2வது ஓவரில் மொத்தம் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆதித்ய தாரே மோர்கலின் பந்துவீச்சில் விஜய்யிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

ஆனால், டிவைன் ஸ்மித் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். இந் நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் 68 எடுத்திருந்த நிலையில் ரெய்னாவிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார் டிவைன் ஸ்மித்.

10 ஓவர்களில் மும்பை அணி 92 ரன்கள் எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக்கும் ரோகித் சர்மாவும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார் தினேஷ் கார்த்திக். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையடுத்து போலார்ட் ஆட வந்தார். ஆனால், 11வது ஓவரின் முடிவில் 8 ரன்கள் எடுத்திருந் நிலையில் ரோகித் சர்மா அவுட் ஆனார். மோரிசின் பந்துவீச்சில் பிராவோவிடம் அவர் கேட்ச் ஆனார். இதையடுத்து போல்லார்ட் மிகச் சிறப்பாக விளையாடினார். 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 14வது ஓவரின் முடிவில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஹஸ்ஸிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஹர்பஜன் சிங் 3 பந்துகளை பார்த்து மிரண்டு மிரண்டு விலகினார். பிரோவோ வீசிய 4வது பந்தை ஒருவழியாக அடித்தார். அது நேராக முரளி விஜய்யின் கையில் போய் மாட்ட முட்டை ரன்களுடன் அவுட் ஆனார்.

ஜான்சன் அவுட். பிராவோவின் பந்துவீச்சில் ரெய்னாவின் அட்டகாச கேட்ச்சில் அவுட் ஆனார். அதே போல அடுத்து வந்தவுடன் முதல் பந்திலேயே கேட்ச் ஆகி அவுட் ஆனார் மலிங்கா. பிராவோவின் பந்துவீச்சில் ஹஸ்ஸியிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் ராயுடுவும் மோகித் சர்மாின் பந்துவீச்சில் மோரிசிடம் கேட்ச் ஆனார். அடுத்து ஓஜாவும் அவுட் ஆக, 18.4 ஓவர்களிலேயே வெறும் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவியது.

பிராவோவும் ரவீந்திர ஜடேஜாவும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரோவோ வெறும் 9 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியத குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஐபிஎல்-6 போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

Story first published:  Tuesday, May 21, 2013, 11:39 [IST]
English summary
Chennai Super Kings won the toss Elect the bat agaist Mumbai Indians
கருத்தை எழுதுங்கள்