Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சஹாரா புனே வாரியஸ் அணி திடீர் விலகல்!

Posted by:
Updated: Wednesday, May 22, 2013, 10:55 [IST]
 

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சஹாரா புனே வாரியஸ் அணி திடீர் விலகல்!
 

மும்பை: புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல்-6 போட்டிகளில் இருந்து விலகுவதாக அதன் உரிமையாளரான சஹாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்கு சஹாரா புனே வாரியர்ஸ் அணி கட்ட வேண்டிய கட்டணத்தை முழுமையாக செலுத்தவில்லை.

இதையடுத்து சஹாரா நிறுவனம் வழங்கிய வங்கி ஜாமீன் தொகையை பிசிசிஐ எடுத்துக் கொண்டுவிட்டது. இதையடுத்து கடுப்பான சஹாரா நிறுவனம் ஐபிஎல்-6 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

புனே வாரியர்ஸ் அணியை 10 ஆண்டுகளுக்கு சஹாரா நிறுவனம் ரூ. 1,702 கோடிக்கு வாங்கியது.

ஆனால், முதலில் 94 ஐபிஎல் போட்டிகள் இருந்த நிலையில் அது இப்போது 74 போட்டிகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் வருடாந்திர கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் சஹாரா நிறுவனம் கோரி வருகிறது. இதை பிசிசிஐ ஏற்க மறுக்கிறது.

இதனால் இந்த ஆண்டு 20 சதவீத கட்டணத்தை மட்டும் (ரூ. 170 கோடி) பிசிசிஐக்கு சஹாரா செலுத்தியது. மீதி கட்டணத்தையும் செலுத்துமாறு பிசிசிஐ கோரி வந்தது. இதை சஹாரா ஏற்காததால் அந்த நிறுவனம் கொடுத்திருந்த வங்கி கேரண்டியை பிசிசிஐ எடுத்துக் கொண்டுவிட்டது.

இதனால் கடுப்பான சஹாரா நிறுவனம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஆனால், ஐபிஎல்-6ல் கிட்டத்தட்ட இறுதிப் போட்டிகள் நெருங்கிவிட்டதால் பிரச்சனை பேசித் தீர்க்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் இப்போதைய ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியின் செயல்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அந்த அணி கடைசி இடங்களில் தான் உள்ளது.

Story first published:  Tuesday, May 21, 2013, 19:18 [IST]
English summary
Indian Premier League (IPL) franchise Pune Warriors India on Tuesday pulled out of the tournament following a financial dispute with the Board of Control for Cricket in India (BCCI), reports said. Pune Warriors failed to pay the full franchise fee for the current year which resulted in BCCI encashing the bank guarantee casting a shadow on its future in the cash-rich league in coming years.
கருத்தை எழுதுங்கள்