Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6 எலிமினேட்டர்.. ஹாட்ஜ் அபாரம்! த்ரில் வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான்! வெளியேறியது சன் ரைசர்ஸ் அணி!!

Posted by:
Updated: Thursday, May 23, 2013, 0:41 [IST]
 

டெல்லி: டெல்லியில் ஐபிஎல் 6வது தொடரின் எலிமினேட்டர் போட்டியில் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையில் ஹாட்ஜ் அதிரடியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழத்தியது.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் தற்போது நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வரும் 24-ந் தேதி மோத வேண்டும். இன்று தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணிகளுக்குமே முக்கியமான மேட்ச் இது.

ஐபிஎல் 6 எலிமினேட்டர்.. ஹாட்ஜ் அபாரம்! த்ரில் வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான்! வெளியேறியது சன் ரைசர்ஸ் அணி!!

தடுமாற்றமான தொடக்கம்- மூன்று ஓவரில் 2விக்கெட் இழப்பு

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற அண சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேமரூன் ஒயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், பார்த்திவ் படேல் ஆகியோர் களம் இறங்கினர். ராஜஸ்தான் அணியின் மாலிக் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ரன்களை எடுக்க தடுமாறியது சன் ரைசர்ஸ். 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி பந்தை மாலிக் வீச பார்த்திவ் படேல் அடித்தார். அதை சாம்சன் அழகாக கட்ச் பிடித்து அவுட் ஆக்க முதல் ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் என்ற நிலையில் இருந்தது சன் ரைசர்ஸ். பார்த்திவ் படேல் 3 பந்துகளை எதிர்கொண்டு ஒரே ஒரு ரன்தான் எடுத்தார்.

பின்னர் ஷிகார் தவானுடன் விஹாரி இணைந்தார். 2வது ஓவரை ஃபாக்னர் வீசினார். இந்த ஓவரில் ஒரே ஒரு ரன்னைத்தான் சன் ரைசர்ஸ் அணி கூடுதலாக எடுத்தது. 3வது ஓவரை மாலிக் வீசினார். அவரது 3வது பந்தை எதிர்கொண்ட ிஹாரி கூப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 8 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்தான் எடுத்திருந்தார். களத்தில் 1 ரன்னுடன் இருந்த ஷிகார் தவானுடன் கேப்டன் கேமரூன் ஒயிட் இணைந்து கொண்டார். 3வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் என்ற தடுமாற்ற நிலையில் இருந்தது சன் ரைசர்ஸ்

ஆனால் 4வது ஓவரில் ஒரு பவுண்டரியை ஷிகார் தவான் அடித்தார். இந்த ஓவரின் முடிவில் 12ரன்களை எட்டியு சன் ரைசர்ஸ். 5வது ஓவரிலும் ஷிகார் தாவன் அதிரடியை வெளிப்படுத்தினார். மாலிக் வீசிய முதல் பந்தை அவர் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார். 5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது சன் ரைசர்ஸ். 6வது ஓவரை வாட்சன் வீசினார். இந்த ஓவரில் ரன்களை எடுக்கா ரொம்பவே தடுமாறினர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள். முதல் 4 பந்துகளில் ஒரு ரன்னை எடுத்த நிலையில் 5வது பந்தை கேப்டன் ஒயிட் பவுண்டரிக்கு அனுப்பினார். 6வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களை எட்டியது சன் ரைசர்ஸ்.

7வது ஓவரை சித்தார்த் திரிவேதி வீசினார். இந்த ஓவரிலும் கூடுதலாக 4 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ் அணி. இருப்பினும் ஷிகார் தவானும் கேப்டன் ஒயிட்டும் சற்றே நிலைத்து சில ஓவர்களைக் கடந்தது அந்த அணிக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இருவரும் நிலைத்து நின்று அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கம் முதலே கட்டுக்கோப்பான பந்து வீச்சு, டைட்டான பீல்டிங் என நெருக்கடி கொடுத்தது. 10 வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்களை எடுத்து திணறியது ஹைதராபாத் அணி. அதே நேரத்தில் டெல்லி மைதானமும் ஒரு காரணம் எனலாம். பொதுவாக அதிக ஸ்கோர் எடுக்கக் கூடிய மைதானமாக டெல்லி இருப்பதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

11வது ஓவரில் திரிவேதி வீசிய 5வது பந்தில் கேமரூன் ஒயிட் ஒரு பவுண்டரி அடிக்க ஷிகார் தவான் -ஒயிட் ஜோடி 50 பந்துகளை எதிர்கொண்டு 52 ரன்களைக் கடந்தது. ஆனால் அடுத்த பந்தில் கூப்பரிடம் கேட்ச் கொடுத்து ஒயிட் அவுட் ஆனார். அவர் 28 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்களை எடுத்திருந்தார். 11 வது ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத அணி 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது. களத்தில 27 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களுடன் இருந்த ஷிகார் தவானுடன் ஷம்மி இணைந்து கொண்டார். 12வது ஓவரை பின்னி வீசினார். பின்னியின் ஓவரில் 2 ரன்களையே எடுத்தது ஹைதராபாத்... 14வது ஓவரில் அடித்து ஆடுவது என ஷிகார் தவானும் ஷம்மியும் முயற்சித்தும் ரன் குவிக்க முடியவில்லை.

15வது ஓவரில் முதல் சிக்சர்

15வது ஓவரை வாட்சன் வீசினார். அவர் முதல் பந்தை ஷம்மி சிக்சருக்கு அனுப்பினார். இன்றைய பட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்த முதல் சிக்சர் இது. இந்த ஓவரில்தான் சற்றே கூடுதலாக 10 ரன்களை சன் ரைசர்ஸ் அணி எடுத்தது. 15வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை எடுத்திருக்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 16வது ஓவரை ஃபாக்னர் வீசினார். அவரது 3வது பந்தை ஸ்டைலாக பவுண்டரிக்குத் திருப்பினார் தவான். அதே பாணியில் அடுத்த பந்தையும் அடிக்க முயன்றார் ஷிகார் தவான். ஆனால் அது அழகான கேட்சாக திரிவேதியால் பிடிக்கப்பட அவுட் ஆனார். தொடக்க வீரராக இறங்கிய ஷிகார் தவான் 16 வது ஓவர் வரை நிலைத்து நின்று 39 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்களையே எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும். களத்தில் இருந்த ஷம்மியுடன் திசாரா பெரேரா இணைந்து கொண்டார். அவர் எதிர்கொண்ட 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்து தமது கணக்கைத் தொடங்கினார். 16 ஓவர் முடிவில் ஒருவழியா 88 ரன்களை எட்டியது ஹைதராபாத் அணி.

அப்பாடா ...100 ரன்கள் எடுத்தாச்சு

17வது ஓவரை கூப்பர் வீச அவரது முதல் பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார் ஷம்மி. இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பெரேரா ஒரு சூப்பர் சிக்சரை அடிக்க அப்பாடா.. ஒருவழியாக கவுரமான ஸ்கோராக 104 ரன்களை எட்டியது சன் ரைசர்ஸ் அணி. சன் ரைசர்ஸ் அணி வழக்கம்போல தமது ஆவரேஜ் ஸ்கோரான 130 ரன்கள் வரை எடுக்கக் கூடும் என்ற எதிரபார்ப்பு உருவானது.

18வது ஓவரில் 2 விக்கெட்

இதை நிரூபிக்கும் வகையில் 18வது ஓவரில் வாட்சன் வீசிய முதல் பந்தில் ஷம்மி சிக்சர் அடித்தார்.. அடுத்த பந்தை ஆவேசமாக அடிக்க அது பவுண்டரி லைனைத் தொடும் முன்பே தடுக்கப்பட்டு வீச.. ஷம்மி ரன் அவுட் ஆனார்... 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ். ஷம்மி 21 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை எடுத்திருந்தார். களத்தில் 5 பந்துகளை எதிர்கொண்டு11 ரன்களுடன் இருந்த பெரேராவுடன் சமந்த்ரே இணைந்தார். வாட்சனின் இந்த ஓவரின் கடைசி பந்தில் பெரேராவும் அவுட் ஆனார். அவர் 6 பந்துகளில் 11 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். 18 ஓவர் முடிவில் 6 விக்கெ இழப்புக்கு 113 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ் அணி. பின்னர் கரன் ஷர்மா இணைந்து கொண்டார். 19வது ஓவரில் கூப்பரின் பந்தை சமந்த்ராய் அடிக்க அது மிகச் சரியாக பவுண்டரி லைனில் பட்டது. இதனால் பவுண்டரியா? சிக்சரா என குழப்பம் வந்தது. நீண்ட இழுபறிக்குப் பின் பவுண்டரியாக அறிவிக்கப்பட்டது.

20வது ஓவரில் சமந்த்ரே ரன் அவுட் ஆனார். அவர் 11 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்களை எடுத்திருந்தார். 7 விக்கெட் இழப்புக்கு 127ரன்களை எட்டியது சன் ரைசர்ஸ் அணி. கரன் சர்மாவுடன் ஸ்டெய்ன் இணைந்தார். 20வது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எட்டியது சன் ரைசர்ஸ் அணி. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்ல 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸிங்- 12 ரன்னில் டிராவிட் அவுட்

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் டிராவிட், ரஹானே ஆகியோர் களமிறங்கினர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் ஓவரை ஸ்டெயின் வீசினார். முதல் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காத டிராவிட் 5,6வது பந்தை அடுத்தடுதது பவுண்டரிக்குப் பறக்கவிட்டு சேஸிங் கணக்கைத் தொடங்கினார். 2வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரிலும் டிராவிட் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கரன்சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டிரவிட் அவுட் ஆனார். அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை எடுத்தார். 12 ரன்களையும் 3 பவுண்டரி தட்டிவிட்டு எடுத்தார். அப்போது 13 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ரகானேவுடன் வாட்சன் இணைந்து கொண்டார்.3வது ஓவரை ஸ்டெய்ன் வீசினார். இந்த ஓவரில் கூடுதலாக 2 ரன்களைத்தான் ராஜஸ்தான் அணி எடுத்தது. ஆனால் 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை வாட்சன் விளாச ஓவர் முடிவில் 25 ரன்களை எட்டியிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 5வது ஓவரை திசர பெரேரா வீசினார். இந்த ஓவரில் 3 ரன்களைத்தான் எடுத்தது ராஜஸ்தான் அணி. 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களை எடுத்தது அந்த அணி.

6வது ஓவரில் 16 ரன்கள்- ஷம்மியின் அற்புத கேட்ச்!

6 வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் ரகானே... 3வது பந்தை ரகானேவும் 5வது பந்தை வாட்சனும் பவுண்டரிக்குத் தட்டிவிட்டனர். இந்த ஓவரில் மட்டும் 16 ரன்களைக் கூடுதலாக எடுத்து 44 ரன்களை எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ். 84 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் இருந்தது. 7வது ஓவரை கரன் சர்மா வீசினார். கரன் சர்மா வீசிய 3வது பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் வாட்சன். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்களைக் கடந்தது. ஆனால் அடுத்த பந்தை அதே பாணியில் தூக்கி அடிக்க ஷம்மியோ பவுண்டரி லைனில் ஜம்ப் செய்து அற்புதமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். வாட்சன் 15 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்களை எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். களத்தில் இருந்த ரகானேவுடன் யாக்னிக் இணைந்து கொண்டார். 7வது ஓவ்ர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி! 8வது ஓவரில் யாக்னிக்கை க்ளீன் போல்டு ஆக்கி வெளியேற்றியதும் ஷம்மி... ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்களை எட்டியிருந்தது. ரகானேவுடன் பின்னி இணைந்து கொண்டார். 8வது ஓவர் முடிவில் 55 ரன்கள் எடுக்கப்பட்டது.

அமித் மிஸ்ரா மெய்டன் விக்கெட்

9வது ஓவரை அமித் மிஸ்ரா வீசினார். அவரது 2வது பந்தை ரகானே அடிக்க அமித் மிஸ்ராவே கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். ரகானே 20 பந்துகளில் 18 ரன்களை எடுத்திருந்தார். இதில் ஒரு சிக்சர் அடங்கும். ரகானே அவுட் ஆகும் போது 70 பந்துகளில் 78 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது அந்த அணி.. இந்த ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டன் விக்கெட் எடுத்து அசத்தினார் அமித் மிஸ்ரா. சாம்சன், பின்னியுடன் இணைந்தார். முதல் 5 ஓவர்களில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி அடுத்த 5 ஓவர்களில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது. 10 வது ஓவரை ஷம்மி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பின்னியை அவுட் ஆக்கிய ஷம்மி அந்த மகிழ்ச்சியை அற்புதமாக கொண்டாடினார். 10வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்ற நிலையில் தடுமாறியத ராஜஸ்தான் அணி. 11வது ஓவரில் ஹட்ஜ் இணைந்து கொண்டார். இந்த ஓவரில் சாம்சன் -ஹட்ஜ் ஜோடி இணைந்து போராடி 5 ரன்கள் எடுத்தது. 12வது ஓவரில் கூடுதலாக 8 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். 48 பந்துகளில் 63 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலையில் விளையாடியது ராஜஸ்தான். சம்மி- ஹட்ஜ் ஜோடி ரன்க சேஸிங் செய்தாக வேண்டிய நிலையில் போராடினர்.

நம்பிக்கை தந்து மீட்ட ஹாட்ஜ்

40 பந்துகளில் 58 ரன்கள் தேவை எ்ற நிலையில் ஹாட்ஜ் 14வது ஓவரில் 2 அற்புதமான சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். இதனால் 36 பந்துகளில் 42 ரன்கள் என்ற நிலைஇருந்தது. அடுத்த 15வது ஓவரிலும் ஹட்ஜ் மற்றொரு சிக்சரை விளாசினார். இதனால் 34 பந்துகளில் 35 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தார் ஹாட்ஜ் 15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 99ரன்களை எடுத்தது. 30 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது ராஜஸ்தான். 16வது ஓவரின் முதல் பந்தில் ஹாட்ஜ் ஒரு ரன் அடிக்க அந்த அணி 100 ரன்களைத் தொட்டது. இந்த ஓவரில் ஸ்டெயின் வீசிய பந்தில் சாம்சனவுட் ஆனார் அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது. 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த ஹாட்ஜுடன் ஃபாக்னர் இணைந்தார். அந்த அணியின் வெற்றிக்கான பொறுப்பு ஹாட்ஜ் தோளில் விழுந்தது..

வெற்றி பெறவைத்த ஹாட்ஜ்

17வது ஓவரை பெரேரா வீசினார். இந்த ஓவரில் ஃபாக்னர் 4வது பந்தில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார். இப்போது 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ராஜஸ்தான். இந்த ஓவரின் முடிவில் 108 ரன்களைத் தொட்டது ராஜஸ்தான். 18 பந்துகள்... எடுக்க வேண்டிய ரன்களோ 25 ...18வது ஓவரை ஸ்டெயின் வீசினார். ஹட்ஜ் காப்பாற்றுவாரா என்ற நேரத்தில் ஸ்டெயின் எக்ஸ்ட்ராவாக 2 ரன்களை அடுத்தடுத்ு கொடுத்தார். 4வது பந்தில் ஃபாக்னர் அற்புதமான பவுண்டரியை வீசினார். இப்போது 14 பந்துகளில்18 ரன்கள் தேவை என்ற நிலை...5வது பந்து வைட் போக ரன்னும் எடுக்கப்பட்டது. 18வது ஓவர் முடிவில் 118 ரன்களைத் தொட்டது ராஜஸ்தான்.. 12 பந்தில் 15 ரன்கள் அடித்தால் வெற்றி.... இந்த ஓவரில் 5 ரன்கள்தான் கொடுத்தார் பெரேரா.. இதனால் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெல்லமுடியும் என்ற திக் திக் நிலையில் ராஜஸ்தான் 20து ஓவரை சந்தித்தது..

வெற்றி பெற வைப்பாரா ஹாட்ஜ் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு சிக்சர் அடிக்க 129 ரன்களைத் தொட்டது ராஜஸ்தான். ஷம்மி வீசிய 2வது பந்தையும் ஹாட்ஜ் சிக்சருக்கு அனுப்பி வைக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். வரும் 24-ந் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இன்றைய போட்டியில் தோல்வியைத் தழுவிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

Story first published:  Wednesday, May 22, 2013, 13:50 [IST]
English summary
Sunrisers Hyderabad won the toss and elected to bat first in IPL Eliminator at Delhi Stadium.
கருத்தை எழுதுங்கள்