Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6 இறுதிப் போட்டி: கொல்கத்தாவில் ரசிகர்களுக்கு செம விருந்து வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Posted by:
Published: Wednesday, May 22, 2013, 15:51 [IST]
 

சென்னை: கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் நடப்பு ஐபிஎல் 6வது திருவிழாவின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஐபிஎல் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுகிழமையன்று கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தற்போதைய பார்மில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியையும் எதிர்கொண்டால் 3 புதிய சாதனைகளை படைத்துவிடும்...

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றினால் கடந்த 6 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கும். இது முதலாவது சாதனை..

ஐபிஎல் 6 இறுதிப் போட்டி:  கொல்கத்தாவில் ரசிகர்களுக்கு செம விருந்து வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

அடுத்த சாதனை... மைக் ஹஸ்சி, பிராவோ மூலமாக... கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல் 733 ரன்களைக் குவித்திருந்ததுதான் அதிகபட்ச ரன்களாகும். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹஸ்சி 732 ரன்களை எட்டியிருக்கிறார். இன்னும் 2 ரன்கள் அடித்தால் போதும் .. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மைக் ஹஸ்சி கெய்லின் சாதனையை முறியடித்தால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு படைக்கப் போகும் 2வது சாதனையாக இருக்கும்..

அதேபோல் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸின் லசித் மலிங்கா 28 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ இப்போது 28 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஐபிஎல் 6ன் இறுதிப் போட்டியில் ஒரு விக்கெட்டை பிராவோ வீழ்த்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது புதிய சாதனையை நிகழ்த்தும்.அத்துடன் ஆரஞ்சு மற்றும் பர்பிள் நிற தொப்பிகளையும் சென்னையே கைப்பற்றும்..

இந்த 3 புதிய சாதனைக்குமே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது... சென்னை சூப்பர் கிங்ஸ் செம விருந்து வைக்குமா? ஞாயிறு பார்ப்போம்!

English summary
It could well be a triple treat for Chennai Super Kings at the Eden Gardens on May 26, Sunday. If CSK maintain their current form, MS Dhoni and his boys could well be holding the IPL trophy in Kolkata on a Super Sunday. CSK have a great chance of winning the trophy for the third time in 6 years.
கருத்தை எழுதுங்கள்