Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: ராஜஸ்தானை 4 விக். வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை! இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுகிறது!!

Posted by:
Updated: Saturday, May 25, 2013, 0:51 [IST]
 

ஐபிஎல் 6: ராஜஸ்தானை 4 விக். வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை! இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுகிறது!!
 

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் குவாலிபையர் 2வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதுகிறத. இன்றைய போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. பின்னர் இதை சேஸிங் செய்த மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல். 6வது தொடர் கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த 19-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளேஆப் தகுதி சுற்றில் நடந்த குாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேறியது.

தாமத தொடக்கம்

குவாலிபையர்-2 ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது . இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இன்று வெற்றி பெறம் அணிதான் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும். ஆனால் திட்டமிட்டபடி போட்டிககன டாஸ் போட முடியாமல் மழை குறுக்கிட்டது. ஒரு மணி நேரம் கழித்து டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் கேப்டன் ராகுல் டிராவிட், ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மும்பை அணியின் ஜான்சன் முதல் ஓவரை வீசினார்.முதல் 3 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காத டிராவிட் 4வது பநதை வெளுத்து அடிக்க அது பவுண்டரியைத் தொட்டது. முதல் ஓவரில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. 2வது ஓவரை ரிஷி தவான் வீசினார். இந்த ஓவரில் ரகானே தம் பங்குக்கு முதலில் 2 ரன்களை அடித்தார். பின்னர் பவுண்டரிக்கு செம வலுவாக ஒரு பந்தை அனுப்பி வைத்ஹ்டார். கடைசி பந்தில் 1 ரன் என மொத்தம் 7 ரன்கள் கூடுதலாக எடுக்க 2வத ஓவர் முடிவில் 11 ரன்கள் எடுக்கப்பட்டன.

ஜான்சன் -டிராவிட் இடையே வார்த்தை போர்

3வது ஓவரை ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் டிராவிட் நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். அபோது ஜான்சன் டிராவிட்டைப் பார்த்து ஏதோ சொன்னார்... அடுத்த பந்தை மீண்டும் பவுண்டரிக்குத் தட்டி விட்ட டிராவிட் ஜான்சனிடம் போய், வாட் ஆர் யூ சேயிங்க்? ஐ கான்'ட் ஹியர் யூ? என்று கேள்வி எழுப்பினார். அதன் ின்னர் கடைசி பந்தை ஜான்சன் வீசி முடிக்க மீண்டும் டிராவிட்- ஜான்சன் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. ஜான்சனை ஹர்பஜன்சிங் சமாதானப்படுத்தினார். 4வது ஓவரை ஓஜா வீசினார். 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 4வது ஓவர் முடிவில் 23 ரன்களை எட்டியது ராஜஸ்தான். 5வது ஓவரை ஜான்சன் வீசினார். அவரது முதல் பந்தையும் 4வது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார் ரகானே. 5வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 33 ரன்களை எட்டியது. டிராவிட் 15 பந்துகளில் 13 ரன்களுடனும் ரகானே 15 பந்துகளில்19 ரன்களையும் எடுத்திருந்தனர்.

அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகள் சரிவு

7வது ஓவரை ஹர்பஜன்சிங் வீசினார். அவரது ஓவரின் 3வது பந்தில் போல்டானார் ரகானே. அவர் 21 பந்துகளில்18 ரன்களை எடுத்திருந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 44 ரன்களை எட்டியிருந்தது. பின்னர் ஷேன் வாட்சன், டிராவிட்டடன் இணைந்தார். 8வது ஓவரை ஓஜா வீசினார். இதில் ராகுல் ஒரு பவுண்டரியை அடித்தார். வாட்சன் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் அடிக்க 8வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்களை எட்டியது ராஜஸ்தான். 9 வது ஓவரை மீண்டும் ஹர்பஜன்சிங் பந்து வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் வாட்சன், ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 8 பந்துகளில் 6 ரன்களை எடுத்திருந்தார். அப்போது 60 ரன்ளை எடுத்திருந்தது ராஜஸ்தான். களத்தில் நிலைத்து இருந்த டிராவிட்டுடன் சாம்சன் இணைந்தார். 9வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்தது.

43 ரன்களில் டிராவிட் அவுட்

10 வது ஓவரை லசித் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 4 வது பந்தை சாம்சன் தூக்கி அடிக்க அதையும் ஹர்பஜன்சிங்கே கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன்சிங் ஒரு கேட்சும் பிடித்தார். 10வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 65 ரன்களை ராஜஸ்தான் எடுத்தது. டிராவிட்டுடன் பின்னி இணைந்து கொண்டார். 11 வது ஓவரை ஹர்பஜன்சிங் மீண்டும் வீசினார். 3வது பந்தில் பின்னி ஒரு பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார். ஆனால் ஹர்பஜனின் இந்த ஓவரில் 8 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது. 12வது ஓவரை ஓஜா வீசினார். அவரது 2வது பந்தில் பி்னி ஒரு சிக்சரை அடித்தார். இன்றைய போட்டியின் முதல் சிக்சர் இது. கடைசி பந்தில் மற்றொரு பவுண்டரியை பறக்கவிட்டார் பின்னி. இந்த ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எட்டியது ராஜஸ்தான். பின்னியோ 8 பந்தில் 16 ரன்களையும் டிராவிட் 36 பந்துகளில் 43 ரன்களை எடுத்து அரை சதம் நோக்கிநகர்ந்தார். ஆனால் 13வது ஓவரை ஹர்பஜன்சிங் வீச அவரது முதல் பந்திலேயே டிராவிட் ரோகித் சர்மாவிடம் கேடச் கொடுத்து வெளியேறினார். 37 பந்துகளில் 43ரன்களை எடுத்திருந்தார் டிராவிட். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அப்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் பின்னியுடன் பிராட் ஹாட்ஜ் இணைந்து கொண்டார். 14வது ஓவரை லசித் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டது. 14வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 101 ரன்களை எட்டியது. 15வது ஓவரை ரிஷி தவா் வீசினார். இந்த ஓவரில் கூடுதலாக 3 ரன்கள் எடுக்கப்பட்டது. 15 வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எட்டியது.

ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகள் பறிபோனது

16வது ஓவரை பொல்லார்டு வீசினார். அவரது முதல் பந்தில் பின்னி அடித்த பந்தை ஹர்பஜன் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். அவர் 17 பந்துகளில் 27 ரன்கள் என பின்னிக் கொண்டிருந்த நிலையில் அவுட் ஆனார். இதை் தொடர்ந்து பிராட் ஹாட்ஜூடன் கூப்பர் இணைந்தார். அவர் பொல்லார்டின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். ஆனால் 2வது பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் வெளியேறினார்.. 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி. ஹாட்ஜூடன் அடுத்து யாக்னிக் இணைந்தார். 17வது ஓவரை ரிஷி த்வான் வீசினார். இந்த ஓவரில் கூடுதலாக 9 ரன்கள் எடுக்கப்பட்டு 119 ஆனது ஸ்கர். 18வது ஓவரை மலிங்கா வீசினார்.

ஓஜாவுக்கு காயம்- வெளியேறினார்- யாக்னிக் அபாரம்!

18வது ஓவரின் 5வது பந்தை யாக்னிக் அடிக்க அது பவுண்டரிக்குப் போக இருந்தது. ஆனால் ஓஜா புரண்டு விழுந்து தடுத்தார். அவர் கீழே விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வெளியேற நேரிட்டது. இந்த ஓவரின் முடிவில் 131 ரன்களை எட்டியது ராஜஸ்தான்.

கடைசி ஓவரில் மலிங்கா கலாட்டா

19வது ஓவர தவான் வீசினார். இந்த ஓவரில் யாக்னிக் ஒரு பவுண்டரியையும் ஹாட்ஜ் 1 பவுண்டரிகளையும் வெளுத்தினர். யாக்னிக் ஒரு பந்தை மினி ஹெலிகாப்டர் ஷாட்டாக அடிக்க மைதானம் உற்சாகத்தில் துள்ளியது 20வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 4 வது பந்தை யாக்னிக் பவுண்டரிக்கு அனுப்ப 150 ரன்களைக் கடந்தது ராஜஸ்தான். 5வது பந்தை மலிங்கா வீசினார். அது வைட் ஆனது. அடுத்த பந்தை ஸ்டம்ப்பை நோக்கி வீசாமல் வேறு எங்கோ மலிங்கா வீச பந்து மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்தது. ராஜஸ்தான் வீரர்களும் ரன் எடுத்துவிட்டனர். 2 வைடுக்குப் பிறகு போட்ட பந்தை ஹாட்ஜ் பவுண்டரிக்கு அனுப்பினார். கடைசி பந்தையும் மலிங்கா வைடாக எங்கோ வீச ஆடுகளமே பரபரப்பானது.. என்னாச்சு மலிங்கா.. ஏன் இப்படி எங்கேயோ வீசினார் ? அப்பாடா என கடைசி பந்தையும் போட்டு முடித்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்திருந்தது. யாக்னின் அபாரமாக ஆடி 17 பந்துகளில் 31 ரன்களைக் குவித்தார். ஹாட்ஜ் 20 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்தார்.

அபாரம் ஹர்பஜன்சிங்
மும்பை அணியின் ஹர்பஜன்சிங் 4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் 2 கேட்ச் பிடித்து 5 விக்கெட் இழப்புக்கு காரணமாக இருந்தார். மலிங்காவோ 4 ஓவர் வீசி 43 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பொல்லார்டு 1 ஓவர் வீசி 6 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பை சேஸிங்..

166 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியின் ஸ்மித், டாரே ஆகியோர் தொட்க்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ராஜஸ்தானின் மாலிக் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடிக்கப்ட்டது. முதல் ஓவரில் மொத்தம் 6 ரன்கள் எடுத்தது மும்பை. 2வது ஓவரை ஃபாக்னர் வீசினார். அவரது 2வது பந்தை டாரே சிக்சருக்கு அற்புதமாக தூக்கி அடிக்க அது கேலரிக்கு நடுவில் விழுந்தது. ஓவரின் கடைசி பந்தை ஸ்மித் தூக்கி அடிக்க சிக்சருக்குப் போக வேண்டியது.. பவுண்டரி லைன் அருகே விழுந்ததால் 4 ரன்கள் கிடைத்தது. இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்கள் கிடைத்தது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு. 3வது ஓவரை ாலிக் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே கூடுதலாக எடுத்து 21 ரன்களை தொட்டது மும்பை அணி.4வது ஓவரை வாட்சன் வீசினார். இந்த ஓவரில் டாரே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். வாட்சன் ஓவரில் 11 ரன்களை எடுத்தனர் மும்பை வீரர்கள். 5வது ஓவரை மீண்டும் மாலிக் வீசினார். இந்த ஓவரில் கூடுதலாக 4 ரன்கள் எடுக்கப்பட்டது. 5வது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்களை எடுத்தது.

6வது ஓவரை ஃபாக்னர் வீசினார். அவரது 2 வது பந்தை ஸ்மித் பவுண்டரிக்கு அனுப்பினார். கடைசி பந்தை டாரே பவுண்டரிக்கு அனுப்ப இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. டாரே- ஸ்மித் ஜோடி இணைந்து 36 பந்துகளில் 45 ரன்களை குவித்திருக்கின்றனர். இதனால் இந்த ஜோடியை பிரித்தாக வேண்டிய நிலை ராஜஸ்தானுக்கு இருந்தது. 7வது ஓவரை சித்தார்த் திரிவேதி வீசினார். இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே மும்பையால் எடுக்க முடிந்து. 8வது ஓவரை மாலிக் வீசினார். மாலிக்கின் முதல் பந்தை பவுண்டரிக்கு ஸ்மித் அனுப்ப மும்பை அணியின் ஸ்கோர் 52 ஆனது. 2வது பந்தை வைட் ஆக வீசினார். மீண்டும் வீசப்பட்ட பந்தையும் ஸ்மித் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார்.8வது ஓவரின் முடிவில் மும்பை அணி 61 ரன்களை எட்டியது. ஆனாலும் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களால் மும்பையின் தொடக்க வீரர்களைப் பிரிக்க முடியவில்லை.

டாரே அவுட்

9வது ஓவரை திரிவேதி வீச 2வது பந்தை டாரே சிக்சருக்கு அனுப்பினார். இந்த ஓவரின் முடிவில் 70 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. 10 வது ஓவரை கூப்பர் வீச முதல் பந்தை டாரே தூக்கி அடிக்க சாம்சன் கேட்ச் பிடித்து வெளியேற அப்பாடா என ராஜஸ்தான் அணி வீரர்கள் பெருமூச்சுவிட்டனர். டாரே 27 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார். இதில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். களத்தில் 33 ரன்களுடன் இருந்த ஸமித்துடன் தினேஷ் கார்த்திக் இறங்கினார். 10வது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்தது.

ஒரு பந்தில் 5 ரன்கள்

11வது ஓவரை திரிவேதி வீசினார்..அவரது 5வது பந்தை ஸ்மித் அடித்து ஒரு ரன்தான் எடுத்தார். ஆனால் வாட்சன் தூக்கி எறிந்த பந்து பவுண்டரிக்குப் போக அல்வாவாக ஒரு பந்தில் 5 ரன்கள் கிடைத்தது மும்பைக்கு.. கூப்பர் தமது 2 வது ஓவரை வீசினார். இந் ஓவரில் 3வது ஓவரை ஸ்மித் எதிர்கொண்டார் அது லெக் பைனாது ஒரு ரன் எடுக்கப்பட்டது. ராஜஸ்தான் வீரர்கள் இப்போதும் தூக்கி எறிந்ததில் கூடுதல் ஒரு ரன் மும்பைக்கு கிடைத்தது. கடைசி 2 பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு தட்டிவிட்டார் தினேஷ் கார்த்திக். இந்த 2 பந்துமே தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால் ராஜஸ்தான் வீரர்கள் தவறிவிட்டனர். இந்த ஓவரில் 3 ப்வுண்டரிகள் உட்பட மொத்தம் 16 ரன்களைக் குவித்தது மும்பை. 12வது ஓவர் முடிவில் மும்பை அணி 99 ரன்களை எட்டியது.

ஸ்மித் அரைசதம்- மற்றொரு தகராறு

13வது ஓவரை ஃபாக்னர் வீச வந்தார். அவர் 2 ஓவர் வீசிய நிலையில் 21 ரன்களைக் கொடுத்திருந்தார். முதல் பந்தை வைட் ஆக போட மும்பை அணி 100 ரன்களை எட்டியது. அடுத்த பந்தை ஸ்மித் சிக்சருக்கு அனுப்ப அவர் அரை சதம் கடந்தார். 38 பந்துகளில் 53 ரன்களை அவர் எட்டினார். இந்த ஓவரில் ஸ்மித் ரன் டுத்துவிட்டு கிரீசுக்கு திரும்பிய போது ஃபாக்னர் பந்தை பிடிக்க முயல அவரை ஸ்மித் தட்டிவிட சின்ன முட்டல் மோதல் வந்துவிட்டது. 13வது ஓவர் முடிவில் 112 ரன்களை எடுத்தது. 42 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் இருந்தது.

14வது ஓவரை வாட்சன் வீச வந்தார். அவர் ஏற்கெனவே 1 ஓவர் வீசி 11 ரன்களை கொடுத்திருந்தார். அவரது முதல் பந்தை தினேஷ் கார்த்திக் பவுண்டரக்குத் தட்டிவிட்டார்..இந்த ஓவரின் கடைசி ப்ந்தை ஸ்மித் சிக்சருக்கு தூக்க 14வது ஓவர் முடிவில் 125 ரன்களைத் தொட்டது மும்பை. 36 பந்துகளில்41 ரன்கள் என்ற எட்டக் கூடிய தொலைவில்தான் வெற்றி மும்பைக்கு இருந்தது..15வது ஓவரை கூப்பர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை அடித்த தினேஷ் கார்த்திக் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். களத்தில் 61 ரன்களுடன் இருந்த ஸ்மித்துடன் ரோகித் சர்மா இணைந்தார். 15வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.. 30 பந்துகளில் 40 ரன்கள் என்ற நிலையில் இருந்தது மும்பை அணி!

த்ரில் ஓவர்களாக கடைசி ஓவர்கள்...3 விக்கெட்டுகள் மளமளவென சரிவு

16வது ஓவரை திரிவேதி வீசினார். அவர் 3 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்திருந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் ரோகித் சர்மாவை போல்ட் அவுட் ஆக்கினார் திரிவேதி. 15.5வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை மும்பை எடுத்திருந்தது. ரோகித் சர்மா 8 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள்தான் எடுத்திருந்தார். இந்த நிலையில் மும்பை அணி வெல்ல 25 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. மும்பை வசம் விக்கெட்டுகள் இருப்பதால் கடைசி ஓவர்கள் த்ரில் ஓவர்களாக உருமாறின. களத்தில் 62 ரன்களுடன் இருந்த ஸ்மித்துடன் பொல்லார்டு இணைந்து கொண்டார்... ஆனால் ஸ்மித் பின்னியின் 3வது பந்தில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ராயுடு இணைந்து கொண்டார். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை..17.3 வது ஓவரில் ஃபாக்னர் வீசிய பந்தில் கூப்பரிடம் கேட்ச் கொடுத்து பொல்லார்டு வெளியேறினார். அவர் 6 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்தார். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் என்ற நிலையில் இருந்தது மும்பை அணி. அதாவது 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடியான நிலையில் ஹர்பஜன்சிங் களத்துக்கு வந்தார்.. 18வது ஓவர் முடிவில் 143 ரன்களை எட்டியது மும்பை அணி. 13 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 19வது ஓவரை எதிர்கொண்டது மும்பை அணி

கடைசி 2 ஓவர்கள்.. 12 பந்தில் 23 ரன்கள் தேவை

19 ஓவரில் முதல் பந்தில் ஒரு சிக்சரை ராயுடு அடித்தார்...4வது பந்தில் அற்புதமான கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. 19வது ஓவர் முடிவில் 158 ரன்களை எட்டியது.

கடைசி ஓவரில் விக்கெட் வீழ்ந்தது! த்ரில்லோ த்ரில்

6பந்துகளில் 8 ரன்களுடன் இறுதி ஓவரை எதிர்கொண்டது மும்பை. கடைசி ஓவரை வாட்சன் வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 2வது பந்தில் ராயுடுவை வாட்சன் போல்டு அவுட் ஆக்கி வெளியேற்றினார். வாட்சன் 11 பந்துகளில்17 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 பவுண்டரி, 1 சிக்ர் அடங்கும். 4 பந்துகளில் 6 ரன்கள் என்ற த்ரில்லான நிலைக்குப் போனது ஆட்டம்... இப்போது ஹர்பஜனுடன் இணைந்தவர் ரிஷி தவான்... தவான் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடிக்க 3 பந்தில் 2 ரன்கள் என்ற நிலை உருவானது... 4வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2 பந்தில் 1 ரன் தேவை என்ற நிலை.. அரங்கம் அதிரத் தொடங்கியது...19.5வது பந்தில் ஹர்பஜன்சிங் அற்புதமாக ஒரு பவுண்டரி அடிக்க மும்பை அணி பைனலுக்குள் நுழைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. 19.5வது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்பஜன்சிங் 4 பந்துகளில் 6 ரன்களுடனும் தவான் 2 பந்துகளில் 4 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

இன்றைய வெற்றியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஐபிஎல் 6வது தடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Story first published:  Friday, May 24, 2013, 10:00 [IST]
English summary
Heavy rains in Kolkata delayed the start of the crucial IPL match between Mumbai Indians and Rajasthan Royals at the historic Eden Gardens Stadium on Friday.
கருத்தை எழுதுங்கள்