Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

திட்டமிட்டபடி ஐபிஎல் 6 தொடரின் இறுதிப் போட்டி! மும்பையுடன் மோதுகிறது சென்னை அணி!

Posted by:
Updated: Monday, May 27, 2013, 10:16 [IST]
 

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் பலத்த சர்ச்சைகளுக்கு நடுவே நாளை கொல்கத்தாவில் திட்டமிட்டபடி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் விளையாடும் என்றும் இந்திய கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 3-ந் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. கடந்த 19-ந்தேதி அனைத்து லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. பின்னர் பிளே ஆப் சுற்று தொடங்கியது. குவாலிபையர் முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சென்ன இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத்தை வென்றது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியேறியது. நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

திட்டமிட்டபடி ஐபிஎல் 6 தொடரின் இறுதிப் போட்டி! மும்பையுடன் மோதுகிறது சென்னை அணி!

இந்த நிலையில் சென்னை அணியின் நிர்வகி குருநாத் மெய்யப்பன் பெட்டிங் விவகாரத்தில் கைதானதால் சென்னை அணி ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படக் கூடும் என்று தகவல்கள் கிளப்பிவிடப்பட்டன. இருப்பினும் நாளை திட்டமிட்டபடி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடபுத் தொடரில் சிக்கல் ஏதும் இல்லை என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது. சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. கடந்த 2010, 2011-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது சென்னை அணி. 5-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது சென்னை. 2-வது முறையாக மும்பை அணி இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 2010-ம் ஆண்டு அந்த அணி சென்னையிடம் தோற்றது. இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி வழக்கம் போல த்ரில்லாக இருக்கும்.

Story first published:  Saturday, May 25, 2013, 19:52 [IST]
English summary
The growing scale of the IPL spot-fixing scam notwithstanding, Sunday's final of the event would go ahead as per schedule and the embattled Chennai Super Kings would also continue to be a part of the league despite the arrest of its top official on allegations of betting.
கருத்தை எழுதுங்கள்