Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல்லிடம் இருந்து ஐசிசி கத்துக்கணும்: கிறிஸ் கெய்ல்

Posted by:
Updated: Wednesday, June 26, 2013, 16:41 [IST]
 

லண்டன்: ஐபிஎல் போட்டிகளைப் பற்றி பலரும் விமர்சித்து வரும் நிலையில் அப்போட்டிகளைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் என்று சூதாட்டப் புகார்கள் எழுந்து நாட்டையே அதிரிச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளையே ரத்து செய்ய வேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆதராவாக பேசியுள்ளார்.

தெற்கு லண்டனில் உள்ள வாலிங்டனில் கிறிஸ் கெய்ல் அகடாமியை அவர் துவங்கி வைத்தார்.

ஐபிஎல்லிடம் இருந்து ஐசிசி கத்துக்கணும்: கிறிஸ் கெய்ல்

அப்போது அவர் கூறுகையில்,

ஐபிஎல் போட்டிகளின்போது சாம்பியன்ஸ் டிராபி குறித்து எவ்வளவு நேர்மையாக விளம்பரம் செய்தனர். ஐபிஎல் பெரிது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உலகக் கோப்பை போன்ற நிகழ்ச்சிகள் ஐபிஎல்லை விட பெரியது. ஐபிஎல்லுடன் ஒப்பிடுகையில் ஊடகங்கள் சாம்பியன்ஸ் டிராபியை அவ்வளவாக விளம்பரப்படுத்தவில்லை.

இது தான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நீக்கிவிடுமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

ஏழாவது சாம்பியன்ஸ் டிராபி வரும் 6ம் தேதி கார்டிப்பில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Sunday, June 2, 2013, 13:27 [IST]
English summary
While IPL is under fire in India, West Indies cricket Chris Gayle has told the International Cricket Council to learn from the Indian Premier League (IPL) when it comes to publicising events such as the Champions Trophy. "I think it is down to how they actually promote it to be honest," the star batsman said at the launch of the Chris Gayle Academy in Wallington, south of London.
கருத்தை எழுதுங்கள்