Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியாவின் 'ஆல் ரவுண்ட்' கலக்கல் ... தெ.ஆப்பிரிக்காவை 26 ரன்களில் துரத்தியது!

Posted by:
Published: Friday, June 7, 2013, 9:53 [IST]
 

கார்டிப்: தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை முதலில் நொறுக்கி பின்னர் அதன் பேட்டிங் எழுச்சியை போராடி கட்டுப்படுத்தி, கடைசியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியப் பெற்றது இந்தியா.

முதல் போட்டியிலேயே தனது பேட்டிங் திறமை, பந்து வீச்சு திறமையை இந்தியா வெளிப்படுத்திய விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா குவித்த 332 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா 305 ரன்களுடன் நின்று போனது.

இந்தியாவின் 'ஆல் ரவுண்ட்' கலக்கல் ... தெ.ஆப்பிரிக்காவை 26 ரன்களில் துரத்தியது!

தனது சேஸிங்கின்போது முக்கியமான மூன்று விக்கெட்களை அடுத்தடுத்து இழந்ததே தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கியக் காரணம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று தொடங்கியது. பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நேற்று கார்டிப்பில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் இணைந்து இந்தியாவுக்கு அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

பயிற்சிப் போட்டிகளில் சரியாக ஆடாத ஷிகர் தவான், நேற்றைய போட்டியில் பிரமாதமாக ஆடினார். சீராக ஆடி வந்த அவர் சதம் போட்டு இந்தியாவுக்குவலு சேர்த்தார். மறுபக்கம் ரோஹித் சர்மாவும் தன் பங்குக்கு அரை சதம் போட்டார். இருவரும் இணைந்து 127 ரன்களைச் சேர்த்த நிலையில் சர்மா அவுட்டானார்.

பின்னர் வந்த வீரர்களில் கோஹ்லி 31 ரன்களையும், திணேஷ் கார்த்திக் 14 ரன்களையும் சேர்த்தனர். கேப்டன் டோணி 27 ரன்களைச் சேர்த்தார்.

ரவீந்திர ஜடேஜா கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 47 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடியதால் இந்தியா நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. இறுதியில், 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்களைக் குவித்தது இந்தியா.

பின்னர் ஆட வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்கம் சரியில்லை. இங்ராம் முதலில் அவுட்டானார். அடுத்து அம்லா 22 ரன்களில் வீ்ழந்தார். அதேசமயம் ராபின் பீட்டர்சன் சிறப்பாக ஆடி 68 ரன்களைக் குவித்தார். அவரை அழகான முறையில் ரன் அவுட் செய்தது இந்தியா.

இப்படி விக்கெட்கள் வீழ்ந்த நிலையி்ல் ஏபி டிவில்லியர்ஸ் மறு முனையில் ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினார். சிறப்பாக ஆடி வந்த அவர் 70 ரன்கள் எடுத்தநிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவின் ரன் குவிப்பு வேகம் சற்று குறைந்தது.

ஆனால், டூப்ளசிஸ் மற்றும் மெக்லாரன் இருவரும் இணைந்து மறுபடியும் நம்பிக்கையூட்டும் வகையில் ஆடினர். அதிலும் மெக்லாரன் மிகச் சிறப்பாக ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 71 ரன்களைக் குவித்தார்.

இருப்பினும் மறு முனையில் விக்கெட்கள் போன வண்ணம் இருந்தது. சரியாக 50 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 305 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதுவரை சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளி்ல தென் ஆப்பிரிக்கா, இந்தியாவைஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக தவான் தேர்வானார்.

English summary
South Africa lost three top wickets in six runs to hand India their first win in group B as the ICC Champions Trophy got under way here on Thursday. Chasing an imposing victory target of 332, South Africa were all out for 305 as Indian won comfortably by 26 runs.
கருத்தை எழுதுங்கள்