Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

2 பிராவோக்களும் அவுட்.. மீண்டும் தடுமாறும் மேற்கு இந்தியத் தீவுகள்

Posted by:
Updated: Tuesday, June 11, 2013, 18:14 [IST]
 

லண்டன்: இந்தியாவின் அபாரப் பந்துவீச்சால் நிலை குலைந்து போன இன்னிங்ஸை சற்றே தூக்கி நிறுத்த முயன்ற கேப்டன் வேயன் பிராவோ மற்றும் டேரன் பிராவோ ஆகியோரும் அவுட்டாகி விட்டனர். தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி மீண்டும் தடுமாறத் தொடங்கியுள்ளது.

சாம்பியன்ஸ்டிராபி போட்டியில் இன்று இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் சந்தித்துள்ளன. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டிகளில் வென்றுள்ளன. எனவே இன்றைய போட்டியில் யார் வென்றாலும் அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.

2 பிராவோக்களும் அவுட்.. மீண்டும் தடுமாறும் மேற்கு இந்தியத் தீவுகள்

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியத் தரப்பில் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. புவனேஸ்குமார் முதல் வகி்கெட்டை வீழ்த்தினார்.அப்போது மேற்கு இந்தியத் தீவுகளின் ஸ்கோர் 25ஆக இருந்தது. பின்னர் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி 3 விக்கெட்கள் போயின. இதனால் தடுமாற்றத்தைச் சந்தித்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

இருப்பினும் தற்போது டேரன் பிராவோ மற்றும் கேப்டன் வேயன் பிராவோ இருவரும் ஸ்திரமாக ஆடி வந்தனர். ஆனால் அவர்களையும் இந்தியா அவுட்டாக்கி வெளியேற்றி விட்டது.

Story first published:  Tuesday, June 11, 2013, 17:33 [IST]
English summary
Darren, Dwayne Bravo lead Windies recovery
கருத்தை எழுதுங்கள்