Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்.. அரை இறுதிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

Posted by:
Published: Saturday, June 15, 2013, 11:13 [IST]
 

கார்டிப்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று தென்னாப்பிரிக்காவும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. ஆனால் தொடக்கம் முதலே மழை நீடித்ததால் 50 ஓவர்கள் என்பது 31 ஓவராகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிராவோ பீல்டிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியின் காலின் இங்ராமும், அம்லாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 80 ரன்களைக் குவித்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் 37 ரன்களிலும் டு பிளிஸ்சிஸ் 35 ரன்களிலும் டேவிட் மில்லர் 38 ரன்களும் எடுக்க 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்.. அரை இறுதிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் களமிறங்கினர். இருப்பினும் மழை அவ்வபோது இடையூறு செய்து வந்தது. கிறிஸ் கெய்ல் 36 ரன்களிலும், டேவோன் சுமித் 30 ரன்களிலும், பிராவோ 12 ரன்களிலும்ம், சாமுவேல்ஸ் 48 ரன்களிலும்ன் ஆட்டம் இழந்தனர். 6வது விக்கெட்டாக பொல்லார்டு அவுட் ஆன நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 26.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்திருந்தது.

இதனால் ஆட்டத்தின் முடிவை அறிய டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 26.1 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 190 ரன்களே எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்து தலா 1 புள்ளிகள் கொடுக்கப்பட்டன. இந்த ஆட்டத்தின் மூலம் ரன்-ரேட்டில் முன்னிலை வகித்த தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியது. மேற்கிந்திய தீவுகள் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

English summary
Kieron Pollard's wicket proved to be the difference as South Africa sneaked into the semifinals of the ICC Champions Trophy on a better net run rate after their rain-hit Group B match against the West Indies ended in a tie under the Duckworth/Lewis method, in Cardiff.
கருத்தை எழுதுங்கள்