Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்த ஆண்டோடு கிரிக்கெட்டுக்கு ‘டாட்டா...’ சொல்லப் போகும் ரிக்கி பாண்டிங்

Posted by:
Published: Friday, June 21, 2013, 15:45 [IST]
 

இந்த ஆண்டோடு கிரிக்கெட்டுக்கு ‘டாட்டா...’ சொல்லப் போகும் ரிக்கி பாண்டிங்
 

மான்செஸ்டர்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 39 வயது ரிக்கி பாண்டிங், ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பரில்டெஸ்ட் ‌போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். தற்போது, முழுவதுமாக கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை, 168 போட்டிளில் 13 ஆயிரத்து 378 ரன்களும், 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 704 ரன்களும் எடுத்துள்ளார் பாண்டிங். 2003 மற்றும் 2007-ம் ஆண்டு நடை பெற்ற உலக கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா. அணியின் கேப்டனாக விளையாடி, அணிக்கு வெற்றிக் கோப்பையை பெற்றுத் தந்த பெருமைக்குரியவர் பாண்டிங்.

இந்திய வீரர் சச்சினுக்கு அடுத்த படியாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனை புரிந்தவர் பாண்டிங்.

வெற்றி நாயகனாக, அணியின் முக்கிய வீரராக வலம், வரும் பாண்டிங் இன்று தனது ஓய்வினை அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து பாண்டிக் கூறியதாவது, ‘வரும் அக்டோபர் மாதத்தி்ல் நடக்க உள்ள சாம்பியன்‌ஸ் லீக் டுவென்டி -20 போட்டிகள் துவங்குகின்றன. இப்போட்டிகள் முடிவடைந்ததும்,அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Former Australia captain Ricky Ponting will retire from all cricket after playing in the Champions League in October, he said on Thursday.
கருத்தை எழுதுங்கள்