Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ354 கோடி வரிபாக்கி!

Posted by:
Updated: Monday, July 8, 2013, 15:19 [IST]
 

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ354 கோடி வரிபாக்கி!
 

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.354 கோடி வரி பாக்கி வைத்துள்ள விவரம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

2007-08-ம் ஆண்டில் இருந்து 2010-11-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரி பாக்கி வைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பிசிசிஐ வரி பாக்கி வைத்திருக்கலாம். ஆனால் அது தொடர்பான முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அத்துடன் கடந்த இரு ஆண்டுகளாக பிசிசிஐ செலுத்த வேண்டிய வரி பாக்கி எவ்வளவு என்பதை வருமான வரித்துறை இதுவரை கணக்கிடாமலேயே உள்ளது.

2010-11-ம் ஆண்டில் பிசிசிஐ-யின் வருவாய் ரூ.874.18 கோடி. இதற்கான வரி ரூ.337.11 கோடி. ஆனால் ரூ.170 கோடி மட்டுமே வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 2009-10-ம் ஆண்டில் பிசிசிஐ-யின் வருவாய் 964.18 கோடி. இதற்கு ரூ.413.59 கோடி வரி செலுத்த வேண்டும். ஆனால் ரூ.307.50 கோடி மட்டுமே பிசிசிஐ வரி செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Saturday, June 29, 2013, 10:52 [IST]
English summary
The Board of Control of Cricket in India (BCCI), which is the richest sports body in the country, has income tax arrears of a whopping Rs 354 crore, an RTI reply from the office of the Assistant Commissioner of Income Tax in Mumbai's Central Circle has revealed.
கருத்தை எழுதுங்கள்