Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வரலாற்றிலேயே முதன்முறையாக... அடுத்தடுத்து 3 உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தப் போகும் இந்தியா

Posted by:
Published: Sunday, June 30, 2013, 12:04 [IST]
 

வரலாற்றிலேயே முதன்முறையாக... அடுத்தடுத்து 3 உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தப் போகும் இந்தியா
 

லண்டன்: 2016-ல் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி, 2021-ல் உலக டெஸ்ட் போட்டி, 2023-ல் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் கூட்டத்தில், 2015 - 2023 வரையிலான உலகளாவிய போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த விவரம் தரப்பட்டிருந்தது.

இந்தியாவில் 20 ஓவர் உலகப் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெறுவது இது தான் முதன்முறை.

2016ம் ஆண்டு, 20 ஓவர் உலக கோப்பை போட்டியும், அதனையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டும் இந்தியாவில் நடை பெற இருக்கின்றன.

மேலும், நான்காவது முறையாக 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India will host the second edition in February-March 2021, apart from hosting the World T20 in 2016 and the 50-over World Cup in 2023.
கருத்தை எழுதுங்கள்