Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அடடே... இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவும் தோத்துருச்சே!

Posted by:
Updated: Tuesday, July 30, 2013, 14:10 [IST]
 

கிங்ஸ்டன்: இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவையும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோற்கடித்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளில் முத்தரப்பு ஒரு நாள் தொடர் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா, இலங்கையும் பங்கேற்றுள்ளன.

முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இலங்கையை வென்றது. இந்த நிலையில் நேற்று 2வது போட்டி நடந்தது. அதில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதின. இதிலும் மேற்கு இந்தியத் தீவுகளே வென்றுள்ளது.

ஒரே ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தத் தோல்வியைச் சந்தித்தது இந்தியா. கடைசி நேரத்தி்ல் கெமர் ரோச்சின் நிதானம் மற்றும் பதட்டமின்மை காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி திரில் வெற்றியைச் சுவைத்தது.

அடடே...  இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவும் தோத்துருச்சே!

முன்னதாக ஆடிய இந்திய அணி 229 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்தது. 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் அந்த அணி வெற்றி பெற்றது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான்சன் சாமுவேல்ஸ் 97 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் ஆடிய கெமர் ரோச் ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவுக்கு 3 விக்கெட்கள் கிடைத்தன.

முன்னதாக விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா 60 ரன்கள் குவித்தார்.

ஷிகார் தவன் 11, கோஹ்லி 11, திணேஷ் கார்த்திக் 23 ரன்கள் என எடுத்தனர். ரெய்னா நிதானமாக ஆடி 44 ரன்களைக் குவித்தார். கேப்டன் டோணியோ 27 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 15, புவனேஷ் குமார் ஆட்டமிழக்காமல் 11 ரன்களை எடுத்தனர்.

Story first published:  Monday, July 1, 2013, 8:45 [IST]
English summary
Kemar Roach got himself a perfect birthday present as he guided West Indies to a thrilling one-wicket victory over India in a nail-biting encounter of the Celkon Mobile Cup Tri-Series in Kingston on Sunday. Chasing a modest target of 230, West Indies made heavy weather of the chase despite a sparkling knock of 97 by opener Johnson Charles but finally managed to register their second win in the tournament with 14 balls to spare.
கருத்தை எழுதுங்கள்