Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்திய தீவுகளை இலங்கை வீழ்த்தியது!

Posted by:
Published: Tuesday, July 9, 2013, 9:58 [IST]
 

முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்திய தீவுகளை இலங்கை வீழ்த்தியது!
 

ட்ரினிடாட்: மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இலங்கை வீழ்த்தியது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனால் இலங்கை அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு நேற்று மீண்டும் நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் 41 ஓவர்களாக குறைக்கபட்டது. 41 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 219 ரன்களை எடுத்தது.

பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. அந்த அணியின் பிராவோ 70 ரன்களையும் சிம்மன்ஸ் 67 ரன்களையும் எடுத்திருந்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் 41 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே மேற்கிந்திய தீவுகளால் எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அணியில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சங்கக்கரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

English summary
Kumar Sangakkara cracked a superb 90 and Angelo Mathews returned with a four-wicket haul as Sri Lanka notched up a comprehensive 39-run victory over West Indies via Duckworth Lewis method in their crucial rain-affected ODI match of the tri-nation series here.
கருத்தை எழுதுங்கள்