Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா!

Posted by:
Published: Wednesday, July 10, 2013, 8:34 [IST]
 

முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா!
 

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி டாஸ்வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தவானும், ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். தவான் 15ரன்களிலும், கேப்டன் கோஹ்லி 31 ரன்களிலும் தினேஷ் கார்த்திக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது.

நீண்ட நேரம் மழை தொடரவே டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 26 ஓவர்களில் 178 ரன்களை இலங்கை அணி எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி வீரர்களால் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.

இலங்கை அணி 25ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 96 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் 6 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை அபாரமாகக் கைப்பற்றினார்.

இதனால் 81 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று நாளை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

English summary
India overcame Sri Lanka and the almost continuous threat of inclement weather on Tuesday at Queen's Park Oval to advance to the final of the Tri-Nation Series two days later against the same opponents.
கருத்தை எழுதுங்கள்